»   »  குருவை மிஞ்சும் சிஷ்யன்... 'மெர்சல்' எடிட்டர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

குருவை மிஞ்சும் சிஷ்யன்... 'மெர்சல்' எடிட்டர் 2017 #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil
2017-ன் சிறந்த படத்தொகுப்பாளர்..!!- வீடியோ

சென்னை: தமிழ் சினிமா 2017 பற்றி வெவ்வேறு பிரிவுகளில் நமது தளத்தின் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.

சிறந்த படத்தொகுப்பாளர் யார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு வாசகர்கள், ரசிகர்கள் அளித்த வாக்குகளின் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த ஆண்டு பல படங்களுக்கு சிறப்பாக பணியாற்றிய ஆண்டனி ரூபன் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று சிறந்த எடிட்டராக தேர்வு செய்யப்படுகிறார்.

படத்தொகுப்பாளர்கள்

படத்தொகுப்பாளர்கள்

படத்தின் நேர்த்திக்கும், ஒழுங்குக்கும் முக்கியக் காரணம் படத்தொகுப்பாளர்கள். ரசிகர்களுக்குச் சுவாரஸ்யம் அளிக்கும் விதமாகவும், காட்சிகளைக் கோர்வையாகவும் அளிக்கும் முக்கியப் பொறுப்பு எடிட்டர்களையே சார்ந்திருக்கிறது. எடிட்டர்களின் பணி தவறினால், காட்சிகள் பிசிறடித்து படம் மொத்தமாகச் சோடை போகும். அப்படிப்பட்ட முக்கியமான் துறையில் இந்த அண்டு அசத்தியவர்கள் யார்?

சிறந்த எடிட்டர் 2017

சிறந்த எடிட்டர் 2017

'மெர்சல்', 'அறம்', 'விவேகம்', 'வேலைக்காரன்' என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றி கடந்த ஆண்டு பாராட்டைப் பெற்றார் எடிட்டர் ஆண்டனி ரூபன். ரூபனின் டீசர், ட்ரெய்லர் கட்ஸுக்கே ரசிகர்கள் சில்லறையச் சிதறவிட்டனர். ரசிகர்களின் பேராதரவைப் பெற்று 64.5% வாக்குகளுடன் 'சிறந்த எடிட்டர் 2017' ஆகத் தேர்வாகிறார் ரூபன்.

ஆண்டனி

ஆண்டனி

'போகன்', 'வனமகன்', 'கவண்', 'சக்க போடு போடு ராஜா' ஆகிய படங்களுக்கு கடந்தாண்டு பணியாற்றிய பிரபல எடிட்டர் ஆண்டனி 11% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரிடம் உதவி எடிட்டராகப் பணியாற்றியவர் தான் ரூபன். வாசகர்களின் தேர்வுப்படி இந்த வருடம் குருவை மிஞ்சி இருக்கிறார் சிஷ்யன் ரூபன்!

ஶ்ரீகர் பிரசாத்

ஶ்ரீகர் பிரசாத்

'தரமணி', 'சோலோ' ஆகிய படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய ஶ்ரீகர் பிரசாத் 11.69% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆந்தாலஜி வகையில் உருவான 'சோலோ' படம் நான்கு விதமான கதைகளை உள்ளடக்கியது. ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் அப்படத்தை எடிட் செய்ததற்கே ஶ்ரீகர் பிரசாத்துக்கு பாராட்டு!

லியோ ஜான் பால்

லியோ ஜான் பால்

'ஒரு கிடாயின் கருணை மனு', 'இப்படை வெல்லும்', 'பைரவா' ஆகிய படங்களுக்கு கடந்த வருடம் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய பிரவீன் கே.எல் 7.58% வாக்குகளையும், 'அதே கண்கள்', 'மாயவன்' ஆகிய படங்களின் எடிட்டர் லியோ ஜான் பால் 4.98% வாக்குகளும் பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறார்கள்.

English summary
Tamil Filmibeat conducted a survey of our site's readers in different sections about Tamil cinema 2017. According to visitors votes, 'Mersa' editor Antony Ruben is selected as 'Best editor 2017'. He worked as an assistant editor for editor Anthony.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X