»   »  2017-ன் சிறந்த படம் எது தெரியுமா? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

2017-ன் சிறந்த படம் எது தெரியுமா? #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் 200 படங்களுக்கு மேல் வெளிவந்த நிலையில், சில படங்கள் மட்டுமே நல்ல வெற்றியைப் பெற்றன.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, கேளிக்கை வரி உயர்வு போன்ற காரணங்களால் இரண்டு வாரம் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையிலும், இத்தனை படங்கள் வெளிவந்திருக்கின்றன.

முன்னணி ஹீரோக்களின் படங்கள் சில மட்டுமே வெளியானாலும், கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியவை வருட இறுதியில் வெளிவந்து கவனம் ஈர்த்த படங்கள் தான்.

தமிழ் சினிமா 2017

தமிழ் சினிமா 2017

நமது தள வாசகர்களிடையே, தமிழ் சினிமா 2017 பற்றி வெவ்வேறு பிரிவுகளின் கீழ் கருத்துக்கணிப்பு நடத்தினோம். ஒரு நாள் மட்டுமே நடைபெற்ற கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக்கானோர் வாக்களித்தனர். வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் 2017-ம் ஆண்டின் சிறந்த படமாகத் தேர்வாகி இருக்கிறது 'விக்ரம் வேதா' திரைப்படம்.

சிறந்த படம் 2017

சிறந்த படம் 2017

31.66% வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது 'விக்ரம் வேதா'. மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில், செம திரைக்கதையோடு வெளிவந்த இந்தப் படம் வசூல் குவித்து விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டைப் பெற்றது. IMDb தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த விக்ரம் வேதா படத்தையே நம் வாசகர்களும் சிறந்த படமாகத் தேர்வு செய்துள்ளனர்.

தீரன் அதிகாரம் ஒன்று

தீரன் அதிகாரம் ஒன்று

29.8% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய இந்தப் படமும் வெகுவான பாராட்டுகளைப் பெற்றது. உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இயக்குநரின் உழைப்பால் கமர்சியல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடட்த்தக்கது.

அருவி

அருவி

22% வாக்குகளுடன் மூன்றாமிடம் பிடித்திருக்கிறது 'அருவி' திரைப்படம். அறிமுக இயக்குநர், புதுமுக நாயகி என ஃப்ரெஷ்ஷாக களமிறங்கிய அருவி டீம் மக்கள் மனதைக் கவர்ந்தது. மனித உணர்வை நெகிழ்ச்சியாகப் பேசிய அருவி படத்தைப் பார்த்து கலங்கினார்கள் ரசிகர்கள். விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிக் குவித்த அருவியை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

அறம்

அறம்

கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் 10.87% வாக்குகளைப் பெற்றுள்ளது. சாமானிய மக்களுக்கும், அதிகார வர்க்கத்தினருக்குமான உறவையும், நிர்வாக சீர்கேடுகளையும் யதார்த்தமான கதையின் மூலமாகக் காட்டிய 'அறம்' திரைப்படம் வெகுவான பாராட்டுகளைப் பெற்று அசத்தியது.

குரங்கு பொம்மை

குரங்கு பொம்மை

அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான 'குரங்கு பொம்மை' திரைப்படம் 2.86% வாக்குகளைப் பெற்றுள்ளது. எளிமையான கதையை உணர்வுப் பூர்வமாகவும், யதார்த்தம் மீறாமலும் கதையாக்கிய விதத்தில் கவனம் ஈர்த்தார் இயக்குநர் நித்திலன்.

English summary
With over 200 films released in Tamil cinema last year, only few films have been successful. 'Vikram Vedha' selected as the best film of 2017 on the basis of reader's votes. 'Theeran adhigaram ondru' got second place in this list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X