»   »  ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸா? ட்ரீம் வாரியர் பிக்சர்ஸா? வாசகர்களின் தேர்வு இதோ.. #BestOfTamilCinema2017

ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸா? ட்ரீம் வாரியர் பிக்சர்ஸா? வாசகர்களின் தேர்வு இதோ.. #BestOfTamilCinema2017

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்ததை விட சிறு பட்ஜெட் படங்கள் அதிக அளவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் வகையில் வெளியான 'அருவி', 'அறம்', 'குரங்கு பொம்மை', 'மாநகரம்', '8 தோட்டாக்கள்', 'அதே கண்கள்' உள்ளிட்ட பல படங்கள் சிறிய அல்லது மீடியம் பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவைதான்.

எவ்வளவு சிறிய / பெரிய பட்ஜெட் என்றாலும், இயக்குநர், நடிகரை விட நேரடியாக ரிஸ்க் எடுப்பது தயாரிப்பு நிறுவனங்கள் தான். சிறந்த படங்களை எடுக்கும் திரைப்பட நிறுவனங்கள் கௌரவிக்கப்படவேண்டியவை.

ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்

வாசகர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் நல்ல பாராட்டுகளைப் பெற்ற நான்கு பட நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில், சிறந்த தயாரிப்பு நிறுவனமாக 'ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' தேர்வாகி இருக்கிறது. ஒருகாலத்தில் சிறு பட்ஜெட் படங்களின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த தேனாண்டாள் நிறுவனம் இப்போது பெரிய பட்ஜெட் படங்களை வரிசையாகத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தயாரிப்பு நிறுவனம் 2017

சிறந்த தயாரிப்பு நிறுவனம் 2017

55% வாக்குகளுடன் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். 'மெர்சல்' திரைப்படத்தைத் தயாரித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற இந்த நிறுவனம் படத்தின் ப்ரொமோஷனில் சிறப்பு கவனம் செலுத்தியது. ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் விதமாக அவ்வப்போது அப்டேட்ஸை அளித்துக்கொண்டேயிருந்து பெரும் கவனத்தை ஈர்த்தது ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி' ஆகிய படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் 30.89% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு திரையுலகினர் மற்றும் விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுக்கிற வகையில் இவர்களது முயற்சி தமிழ் சினிமாவுக்கு வளர்ச்சி.

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்

'அதே கண்கள்', 'மாயவன்' படங்களைத் தயாரித்த 'திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் 8.39% வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் நம்பிக்கை மிகுந்த படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார் 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார். புதுமையான கதைகளோடு வெளியாகும் படங்கள் இவர்களது சாய்ஸ்.

ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன்

ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன்

ஜே.சதீஷ் குமாரின் 'ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன்' நிறுவனம் 5.48% வாக்குகளைப் பெற்றுள்ளது. 'தரமணி', 'புரியாத புதிர்' உள்ளிட்ட படங்களை கடந்த வருடம் தயாரித்த இந்த நிறுவனம் நல்ல படங்களுக்கும், சிறப்பான கதைகளுடன் வரும் இயக்குநர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து வருகிறது.

English summary
Production companies that take good films should be honored. Sri thenandal Films is selected as 'Best production company of 2017' with 557% votes. S.R.Prabhu's Dream warrior pictures got second place.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X