»   »  சீரியல் ஹீரோயின்களில் பிரியாவும், சத்யாவும்தான் பெஸ்ட்... ரசிகர்கள் ஓட்டு

சீரியல் ஹீரோயின்களில் பிரியாவும், சத்யாவும்தான் பெஸ்ட்... ரசிகர்கள் ஓட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீரியல் இன்றி அமையாது உலகு என்பது போல இல்லத்தரசிகளின் உலகமே இன்றைக்கு சீரியல்தான் என்றாகிவிட்டது. சீரியல் பார்க்காத இளைஞர்கள் கூட இன்றைக்கு பிரியாவின் வருகையால் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம். அதை உறுதி செய்யும் வகையில் எங்களுக்குப் பிடித்த சீரியல் நாயகி பிரியாதான் என்று கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

சினிமா நாயகிகளை விட சீரியல் நாயகிகள் பலர் அழகாகவும், அசத்தலாகவும் நடிக்கின்றனர். இன்றைய சீரியல் ஹீரோயின்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார் என்று ஒன் இந்தியா இணையதளம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

பிரியா

பிரியா

மொத்தம் 11,748 பேர் பங்கேற்ற இந்த கருத்துக்கணிப்பில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்கும் பிரியாவிற்கு 4,017 பேர் வாக்களித்துள்ளனர். இது 34.19 சதவிகிமாகும்.

சத்யா

சத்யா

தெய்வமகள் சீரியலில் நடிக்கும் சத்யாவை பிடிக்கும் என்று 2,885 பேர் தெரிவித்துள்ளனர். மூன்றாவதா சரவணன் மீனாட்சி தொடரின் நாயகி தங்க மீனாட்சிக்கு 1,331 பேர் வாக்களித்துள்ளனர்.

துளசி

துளசி

தென்றல் தொடரின் நாயகி துளசியை பிடிக்கும் 1,254 பேர் தெரிவித்துள்ளனர். நாதஸ்வரம் தொடரில் நடித்த மலர்தான் குல தெய்வம் தொடரின் அலமுவாக நடிக்கிறார். இவருக்கு 710 பேர் வாக்களித்துள்ளனர்.

அவந்திகா

அவந்திகா

இவருக்கு அடுத்தபடியாக வாணி ராணி டிம்பிள் பிடிக்கும் என்று 540 பேரும், பிரியமானவளே அவந்திகாவைப் பிடிக்கும் என்று 343 பேரும் கூறியுள்ளனர்.

சிநேகா

சிநேகா

வம்சம் தொடரில் மச்சான் மச்சான் என்று கொஞ்சும் பூமிகாவை 272 பேருக்கும், வள்ளி நாயகி வள்ளியை 210 பேருக்கும் பிடித்திருக்கிறது. அதே போல தாமரை சீரியல் சிநேகாவை 171 பேருக்கு பிடித்திருக்கிறது என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஒரே ஒரு சீரியல்

ஒரே ஒரு சீரியல்

சிறந்த ஹீரோயினாக வாசகர்கள் தேர்வு செய்துள்ள பிரியா பவானிஷங்கர் ஒரு பொறியியல் பட்டதாரி. தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து சீரியல் நடிப்பு, டிவி நிகழ்ச்சி தொகுப்பு என தொலைக்காட்சிகளில் பிரபலமாக வருகிறார். ஒரே ஒரு சீரியல் போதும் இனி சீரியலில் நடிக்க மாட்டேன் என்று கூறி ரசிகர்கள் மனதில் குண்டு போட்டுள்ளார் பிரியா.

English summary
Priya and Sathya are the best serial heroines One india tamil viewers select in Poll.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil