»   »  சிறந்த வில்லன் 2017 யார்? வாசகர்களின் முடிவு இதோ... #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

சிறந்த வில்லன் 2017 யார்? வாசகர்களின் முடிவு இதோ... #BestOfTamilCinema2017 #FilmibeatPolls

Posted By:
Subscribe to Oneindia Tamil
2017 ஆண்டின் டாப் 10 வில்லன்களின் பட்டியல்- வீடியோ

சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த வருடம் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் யார் என பல பிரிவுகளில் என நமது தளத்தில் வாசகர்களிடம் சர்வே எடுத்தோம்.

ஒரு நாள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்கிற நிலையிலும் நமது வாசகர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு பிரிவிலும் வாக்களித்து தங்களது ஆதரவைக் கொடுத்தனர்.

வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பானவர்களின் முடிவு வெளியிடப்படுகிறது.

சிறந்த வில்லன் 2017

சிறந்த வில்லன் 2017

எஸ்.ஜே.சூர்யா, விவேக் ஓபராய், ஹரீஷ் பெரடி, பசுபதி, பிரசன்னா, ராணா ஆகிய ஆறு பேரும் கடந்த ஆண்டு வெளிவந்த படங்களின் மூலம் அதிகம் பாராட்டப்பட்ட வில்லன் நடிகர்களாக இருந்தனர்.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

அவர்களில் சிறந்த வில்லன் 2017 ஆகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 48% வாசகர்களின் வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. 'மெர்சல்', 'ஸ்பைடர்' ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

ராணா

ராணா

இரண்டாவது இடத்தில் 'பாகுபலி 2' வில்லன் ராணா இருக்கிறார். அவர் மொத்தமாக 36% வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாகுபலி படத்தில் நடித்த பலரும் தமிழ் ரசிகர்களை அதிகளவில் ஈர்த்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

விவேகம் வில்லன்

விவேகம் வில்லன்

'திருட்டுப்பயலே 2' படத்தில் சைபர் குற்றங்கள் புரியும் வில்லனாக அலட்டல் இல்லாமல் அசத்திய பிரசன்னா 8% வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறார். 'விவேகம்' படத்தில் அஜித்துக்கு ஆட்டம் காட்டிய வில்லனாக நடித்த விவேக் ஓபராய் 3% வாக்குகளுடன் நான்காவது இடத்தை நிரப்பி இருக்கிறார்.

English summary
We had a survey with our site readers in various sections on Tamil cinema 2017. Thousands of our readers voted in each section and gave their support. According to readers votes, SJ Surya has been selected as the best villain 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X