twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா 2017... என்னா வில்லத்தனம்!

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வில்லனாக நடிக்கத் தான் நடிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டும் சில ஹீரோக்களும், குணச்சித்திர நடிகர்களும் வில்லன்களாக அவதாரம் எடுத்தார்கள்.

    நாம் பார்க்கப்போகும் டாப் 5 வில்லன்களுமே அதற்கு முன்பு வில்லனாக நடித்ததில்லை என்பது ஆச்சர்யமான உண்மை. பாகுபலி 2 வில் வில்லனாக மிரட்டிய ராணா இந்த வரிசையில் சேர்க்கப்படவில்லை. நேரடியாக தமிழில் மட்டும் உருவான படங்களை கணக்கில் எடுத்துள்ளோம்.

    5. வினய்

    5. வினய்

    துப்பறிவாலனில் சமையல் ப்ளஸ் சாக்லேட் பாயாக வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டியிருந்தார் வினய். ஒரு காஃபி கிடைக்குமா? என்று வினய் கேட்கும்போதெல்லாம் மிரண்டனர் ரசிகர்கள்.

    4. எஸ் ஜே சூர்யா

    4. எஸ் ஜே சூர்யா

    2017 இல் வில்லன் அவதாரம் எடுத்த எஸ் ஜே சூர்யா மாஸ் க்ளாஸ் என்று மெர்சல், ஸ்பைடர் இரண்டு படங்களிலும் வில்லத்தனம் காட்டினார். இரண்டுமே மீம் க்ரீயேட்டர்களுக்கு அல்வா போல் அமைந்தன. அதிலும் ‘இன்னும் 30 வருஷம் கழிச்சு நார்மல் டெலிவரின்னா ஆச்சர்யமா பார்ப்பாங்க' என்று சூர்யா பேசும் வசனம் பிரபலம் ஆனது.

    3. பகத் பாசில்

    3. பகத் பாசில்

    வேலைக்காரன் படத்தில் வெள்ளை காலர் வில்லனாக பகத் பாசில். எந்த ஏரியாவாக இருந்தாலும் அசால்ட்டா அடிப்பேன் என்று காட்டினார் பகத். சிவகார்த்திகேயன் பேச பேச வேடிக்கை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் எக்ஸ்பிரஷன்களிலேயே தூள் கிளப்பினார் பகத். இந்த வில்லன் மீது துளி கூட கோபமோ பயமோ வராதது திரைக்கதையின் மைனஸ்.

    2. எம் எஸ் பாஸ்கர்

    2. எம் எஸ் பாஸ்கர்

    சமூகத்தால் புறக்கணிக்கப்படும் ஒரு அப்பாவி நல்லவர் எப்படி சமூக விரோதி ஆகிறார் என்பதுதான் எட்டு தோட்டாக்கள் படமே... அந்த வகையில் எம் எஸ் பாஸ்கரை சுற்றித்தான் படத்தின் கதையே பின்னப்பட்டிருந்தது. தன் ரோலை உணர்ந்து அபாரமாக நடித்திருந்தார் எம் எஸ் பாஸ்கர்.

    1. குமரவேல்

    1. குமரவேல்

    வெலவாசிலாம் ஏறிடுச்சு சுந்தர அண்ணே... என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கனகச்சிதமாக திட்டமிட்டு பாரதிராஜாவை கொல்லும்போது பிரமாதப்படுத்தியிருந்தார். இந்த ஆண்டின் சிறந்த வில்லத்தனம் அதுதான். கண்களில் பாவத்தை வைத்துக்கொண்டே கிரிக்கெட் பேட்டால் கொலை செய்யும் காட்சி பார்வையாளர்களை பதற வைத்தது. குரங்கு பொம்மை படத்தின் பெரிய தூணே குமரவேல் தான். ஹாட்ஸ் ஆஃப் டூ யூ தெ பெஸ்ட் வில்லன் 2017!

    English summary
    Here is the list of best villains in Tamil Cinema 2017
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X