»   »  அனுஷ்காவின் 'பாகமதி' - வைரலாகும் ப்ரொமோ வீடியோ!

அனுஷ்காவின் 'பாகமதி' - வைரலாகும் ப்ரொமோ வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வைரலாகும் 'பாகமதி' ப்ரொமோ வீடியோ!

சென்னை : 'பாகுபலி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா 'பாகமதி' என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'பாகமதி' படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் த்ரில்லர் படமாகும்.

அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன் ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது.

Bhaagamathie promotional video

'பாகமதி' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரொமோஷனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த ப்ரொமோஷனல் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

'பாகமதி' படத்தின் ப்ரொமோஷனுக்காக இரண்டு மொழிகளிலும் பம்பரமாய்ச் சுழன்று வருகிறார் அனுஷ்கா. கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் நடித்து வரும் அனுஷ்கா, இப்படத்தின் வெற்றியை அதிகமாக எதிர்பார்க்கிறார்.

English summary
Anushka shetty has acted in 'Bhaagamathie' after 'Baahubali'. 'Bhaagamathie' is a thriller film will be released in Tamil and Telugu. 'Bhaagamathie' team was released a promotional video of the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil