Exclusive - ரஜினிக்கு அடித்தளமே அந்த கேரக்டர்.. அந்த டெப்த் டியூடில் இல்லை.. பாக்யராஜ் பிரத்யேக பேட்டி
சென்னை: கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. படத்துக்கு பாராட்டும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இப்படம் குறித்த தனது பார்வையை ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து கீர்த்திஸ்வரன் இயக்கியிருக்கும் டியூட் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. ஹீரோவாக நடித்து லவ் டுடே, டிராகன் என இரண்டு ஹிட் படங்களை வரிசையாக பிரதீப் கொடுத்திருந்ததாலும்; 2கே கிட்ஸ்களின் மத்தியில் அவருக்கு இருக்கும் மார்க்கெட் மற்றும் செல்வாக்கு காரணமாகவும் படத்துக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
அசத்திய பிரதீப், சரத்: இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். சரத்குமார் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். படத்தின் இரண்டு முக்கிய தூண்களாக இருந்தார்கள் பிரதீப்பும், சரத்தும். ஹீரோ தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த சரத்குமாரோ காமெடி, வில்லத்தனம் ஆகிய இரண்டையும் சரியான மீட்டரில் டெலிவர் செய்து அப்ளாஸை அள்ளினார்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட்: நடிகர்கள் மட்டுமின்றி படத்தின் வெற்றிக்கு பெரிய காரணமே கீர்த்திஸ்வரன் எடுத்துக்கொண்ட கதைக்களமும், அதை அவர் உருவாக்கிய விதமும்தான். அந்த ஏழு நாட்கள், புவனா ஒரு கேள்விக்குறி, அபூர்வ சகோதரர்கள் என பழைய படங்கள் இதே ஜானரில் வந்திருந்தாலும் தற்போதைய தலைமுறைக்கு ஏற்றபடி போர் அடிக்காமல் ஜனரஞ்சகமாக ஆணவ கொலைக்கு எதிராக பேசியிருந்தார் இயக்குநர்.
100 கோடி ரூபாய் வசூல்: விமர்சன ரீதியாக பெரும்பாலும் படம் கொண்டாடப்படவே செய்தது. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற சில விஷயங்கள், வசனங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எது எப்படியோ படம் 100 கோடி ரூபாய் வசூலித்துவிட்டது. இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் டியூட் படம் பற்றி பேசியிருக்கிறார்.
பாக்யராஜ் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், 'இதே ஜானரில் பல படங்கள் வந்திருக்கின்றன. படத்தில் நிறைய சீன்களை காமெடியாக சொன்னது ஒர்க் அவுட் ஆகவில்லை. கதையில் ஹீரோ தியாகம் செய்வதைகூட காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதே ஜானரில் இதற்கு முன்னர் வந்த படங்களில் எல்லாம் அப்படி இல்லை. உதாரணத்துக்கு புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ரஜினி செய்யும் தியாகம் அப்பழுக்கு இல்லாமல் காமெடி இல்லாமல் இருக்கும். அந்த கேரக்டர்தானே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு அடித்தளமிட்டது. அந்த டெப்த் டியூட் படத்தில் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











