twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போன தடவை மாதிரி ஈஸி இல்ல.. இந்தத் தடவை யாரு ‘தலைவா’னு யூகிக்கிறது ரொம்பக் கஷ்டம்தான்!

    நடிகர் சங்கத் தேர்தலில் இம்முறை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடையே அதிகரித்துள்ளது.

    |

    Recommended Video

    Nadigar Sangam: சங்க கட்டிட நிதிக்காக கார்த்தி ரூ.1 கோடி, விஷால் ரூ. 25 லட்சம்- வீடியோ

    சென்னை: வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில், இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான அணி, விஷால் அணிக்கு பயங்கர போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போது சரத்குமார் அணிக்கு கடும் போட்டியாக இருந்தனர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர். சரத்குமாரை தோற்கடித்து, நடிகர் சங்கத் தலைவர் ஆனார் நாசர். அதேபோல் ராதாரவியை வெற்றி பெற்று பொதுச் செயலாளர் ஆனார் விஷால்.

    விஷால் அணி, தாங்கள் கூறிய வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டது. சங்கக் கட்டடம் கட்டும் பணி, பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இதனால் அவர்கள் மீது அதிருப்தி குறைவு தான்.

    ஹாலிவுட்டுக்கு போனாலும் தமிழன்டா.. இங்கிலீஷுல லவ்சு பண்ணும் தனுஷ்.. வைரலாகும் ஏய் காத்தே எதிர்காத்தே ஹாலிவுட்டுக்கு போனாலும் தமிழன்டா.. இங்கிலீஷுல லவ்சு பண்ணும் தனுஷ்.. வைரலாகும் ஏய் காத்தே எதிர்காத்தே

    தலைவர் பதவி:

    தலைவர் பதவி:

    குறிப்பாக, தற்போதைய தலைவர் நாசர் மீது எந்த அதிருப்தியும் இல்லை. உறுப்பினர்கள் எப்போது தொடர்பு கொண்டாலும் உடனடியாக அவர்களின் பிரச்சினைகளை சரிசெய்ய துரிதமாக செயல்பட்டார் நாசர். இதேபோல் தான் கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் மீதும் சங்க உறுப்பினர்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

    விஷால் மீது அதிருப்தி:

    விஷால் மீது அதிருப்தி:

    ஆனால் விஷால் மீது தான் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடும் அதிருப்தி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெகு சில நாட்கள் மட்டுமே அவர் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக உறுப்பினர்கள் கருதுகின்றனர். விஷால் யாரையும் மதிப்பதில்லை என்பதும் ஆர்கே சுரேஷ் போன்றோரின் குற்றச்சாட்டு.

    வெற்றி கேள்விக்குறி:

    வெற்றி கேள்விக்குறி:

    அதனால் தான் விஷாலுக்கு எதிராக இயக்குனர் பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் அணி திரட்டி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். விஷால் அணியில் இருந்த குட்டி பத்மினி போன்றோர், எதிரணிக்கு தாவிட்டனர். இதனால் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் மீதான வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

    பாக்யராஜின் அணுகுமுறை:

    பாக்யராஜின் அணுகுமுறை:

    நாசர் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்றாலும் கூட, கடந்த மூன்று ஆண்டுகளில் அதிரடியாக அவர் எதையும் செய்யவில்லை என்ற கருத்து இருக்கிறது. இதனால் பாக்யராஜ் மீது தற்போது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காரணம், சர்கார் கதை விவகாரத்தில், எழுத்தாளர் சங்கத் தலைவராக அவர் செயல்பட்டவிதம், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    கடும் போட்டி:

    கடும் போட்டி:

    இதனால் பாக்யராஜ் - நாசர் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம் ஐசரி கணேஷ், விஷால் இடையேயும் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும், விஷால் அணிக்கு எதிராக நாடக நடிகர்களை திருப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே நடிகர் சங்கத் தேர்தலில் தற்போதே அனல் பறக்க தொடங்கி இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு, கோலிவுட்டில் தேர்தல் திருவிழா களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.

    English summary
    Director Bhagyaraj's team will give tough competition to Vishal team in this Nadigar sangam election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X