»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தேர்தல் பிரச்சாரத்தில் இறங்க மாட்டேன், ஆளை விடுங்க, எனக்கு நாலு படம் ரெடியா இருக்கு எனச் சொல்கிறார்சினிமா டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ்.

கோவையில் ஒரு கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள கோவை வந்திருந்தார் பாக்கியராஜ்.அவரைச் சூழ்ந்து கொண்ட நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அரசியலுக்கு போகனும்ங்கற எண்ணம் இப்போது இல்லை. தொழில் நல்லா இருக்கு. வேட்டிய மடிச்சுக் கட்டுப்படம் எடுக்கப் போறேன்.

அதனால எனக்கு தொழில்ல நெறைய வேலை இருக்கு. இத கவனிக்க நேரம் போதாது. தற்சமயம் கையில நாலுபடம் இருக்கு. இரண்டு படங்களை நானே டைரக்ஷன் செய்றேன். இதுல ஒரு படத்துல பார்த்திபன் நடிக்கப்போகிறார்.

சினிமா தொழில்ல இப்போ நல்ல முன்னேற்றமிருக்கு. நிறையப் படங்கள் வருது. அதனால, மீண்டும் தொழில்லஇறங்கப் போறேன். அரசியலுக்க இப்போ வர்றமாதிரி இல்ல. நான் தொழில கவனிக்கப் போறேன் என்றார்பாக்கியராஜ்.

Please Wait while comments are loading...