»   »  ஏன்யா நான் ஏற்கனவே அடிவாங்குனது பத்தாதா: ஹீரோ, ஹீரோயின் மீது கடுப்பில் இயக்குனர்

ஏன்யா நான் ஏற்கனவே அடிவாங்குனது பத்தாதா: ஹீரோ, ஹீரோயின் மீது கடுப்பில் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே மீது கடும் கோபத்தில் உள்ளாராம் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோரை வைத்து பத்மாவதி படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படம் முடியும் வரை ரன்வீர், தீபிகா ஒன்றாக எங்கும் செல்லக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளார் சஞ்சய்.

சஞ்சய்

சஞ்சய்

ராணி பத்மாவதியை படத்தில் அசிங்கப்படுத்துவதாகக் கூறி ஒரு கும்பல் செட்டை தாக்கி சஞ்சய் லீலா பன்சாலியையும் அடித்து நொறுக்கியது. பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இருப்பதாக கருதியே பன்சாலியே தாக்கினார்கள்.

கட்டளை

கட்டளை

அடிவாங்கிய பிறகே அலாவுதீன் கில்ஜியாக நடிக்கும் ரன்வீரை பத்மாவதியாக நடிக்கும் தீபிகாவுடன் ஊர் சுற்ற வேண்டாம் என்று சஞ்சய் லீலா பன்சாலி உத்தரவிட்டார்.

காதல்

காதல்

காதலர்களான ரன்வீர், தீபிகா பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் மிகவும் நெருக்கமாக முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

கோபம்

கோபம்

முத்த புகைப்படத்தை பார்த்த பன்சாலிக்கு ரன்வீர், தீபிகா மீது கடும் கோபமாம். படத்தில் அவர்களுக்கு இடையே எந்த நெருக்கமான காட்சியும் இல்லை என்று பன்சாலி விளக்கம் அளித்த நேரத்தில் நிஜத்தில் வில்லங்கத்தை கூட்டிவிட்டனர்.

English summary
Bollywood director Sanjay Leela Bhansali is angry with Ranveer Singh and Deepika Padukone after their intimate picture went viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X