»   »  'குற்றம் கடிதல்' பிரம்மாவிற்காக ஜோதிகாவுடன் இணையும் பானுப்ரியா!

'குற்றம் கடிதல்' பிரம்மாவிற்காக ஜோதிகாவுடன் இணையும் பானுப்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'குற்றம் கடிதல்' பிரம்மா இயக்கும் அடுத்த படத்தில் நடிகை பானுப்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

தன்னுடைய 16 வது வயதில் 'மெல்ல பேசுங்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பானுப்ரியா 33 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் நீடித்து வருகிறார்.

கடைசியாக '3' படத்தில் தனுஷின் அம்மாவாக பானுப்ரியா நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் பிரம்மா இயக்கும் அடுத்த படத்தில் பானுப்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Bhanupriya Signed Bramma's Next

ஜோதிகா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பானுப்ரியா நடிக்கவிருக்கின்றனர். இதுகுறித்து பிரம்மா ''இந்தப் படத்தில் பானுப்ரியா கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறோம். கண்டிப்பாக இப்படத்தின் கதை எல்லாத் தரப்பினரையும் கவரும். ஜோதிகா நடிப்பதால் '36 வயதினிலே' போல பெண்கள் சார்ந்த படம் என்று கூற முடியாது.

ஏனெனில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுவாரஸ்யமானதாக அமைத்திருக்கிறேன்'' என்றார்.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 150 படங்களுக்கும் மேலாக பானுப்ரியா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Bhanupriya Play a Important role for Bramma's Next Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos