»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் பரணி திடீர் திருமணம் செய்து கொண்டார். தன் இசையில் பாடிய பாடகியையே காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பெரியண்ணா படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் பரணி.

இருப்பினும் பார்வை ஒன்றே போதுமே படம்தான் அவரை புகுழுக்கு கொண்டு வந்தது. துளித் துளியாய் சொட்டும் மழைத் துளியாய்மற்றும் திரும்ப திரும்ப பார்த்து பார்த்து பாடல்கள் மூலம் பிரபலம் ஆனார்.

அதைத் தொடர்ந்து சார்லி சாப்ளின் படத்திலும் அசத்தினார். பேசாத கண்ணும் பேசுமே படத்திற்கும் இசையமைத்துள்ளார் பரணி.

இந் நிலையில் சுமித்ரா என்ற பெண்ணை காதலித்த அவர் அவரையே தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். போரூர் முருகன்கோவிலில் வைத்து இரு வீட்டாரின் முன்னிலையில் நேற்று திருமணம் நடந்தது.

பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே மற்றும் முத்தமிடலாமா ஆகிய படங்களில் சுமித்ரா பாடியுள்ளார். அப்போதுஇருவருக்கும் காதல் உருவானது.

Please Wait while comments are loading...