16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ‘வெயில்’ கூட்டணி: வசந்தபாலனுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரத்

சென்னை: தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வசந்தபாலன்.

2006ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்றது.

வெயில் படத்தில் நடித்த பரத், மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் மாணவர்கள்

இயக்குநர் ஷங்கரின் மாணவர்கள்

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து திரைத்துறையில் அறிமுகமானவர் வசந்தபாலன். ஆல்பம் படம் மூலம் இயக்குநராக தனது கணக்கைத் தொடங்கிய வசந்தபாலன், 'வெயில்' திரைப்படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதேபோல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். சித்தார்த், தமன், நகுல், மணிகண்டன் ஆகியோருடன் பரத்தும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். ஷங்கரின் மாணவர்களான வசந்தபாலன், பரத் இருவருமே 'வெயில்' படத்தில் ஒன்றிணைந்தனர்.

தேசிய விருது வென்ற வெயில்

தேசிய விருது வென்ற வெயில்

2006ல் வெளியான 'வெயில்' தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான படங்களில் ஒன்று என விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. பரத், பசுபதி, பாவனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், கல்ட் சினிமா வகையில் கிளாசிக்காக உருவாகியிருந்தது. மேலும், இசையமைப்பாளார் ஜிவி பிரகாஷ் குமாரும் வெயில் படம் மூலமாகவே தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். யதார்த்தமான கலை படைப்பாக வெளியான வெயில். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் வென்று அசத்தியது.

வெற்றிக்காக காத்திருக்கும் வசந்தபாலன்

வெற்றிக்காக காத்திருக்கும் வசந்தபாலன்

வெயிலை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு படத்துக்கும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் வெளியான அரவான், காவியத் தலைவன், ஜெயில் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக வசந்தபாலன் இயக்கத்தில் கடசியாக வெளியான ஜெயில் திரைப்படம், கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில், தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் 'அநீதி' படத்தை இயக்கி வரும் வசந்தபாலன், அடுத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி

இந்நிலையில், வெயில் படத்தில் வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த பரத், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வசந்தபாலனுடன் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போட்டோவுடன் ட்வீட் செய்துள்ள பரத், "2006ம் ஆண்டு பெரிய வெற்றி கொடுத்த 'வெயில்' பட இயக்குநருடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். பரத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X