»   »  பரத்துக்கு இந்த 'கடைசி பெஞ்சாவது' கை கொடுக்குமா?

பரத்துக்கு இந்த 'கடைசி பெஞ்சாவது' கை கொடுக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவுக்கு இன்னுமொரு புதிய தயாரிப்பு நிறுவனம் நுழைந்துள்ளது. அது ராமா ரீல்ஸ். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடாதான் இதன் அதிபர்.

இந்த நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்துக்கு 'கடைசி பெஞ்ச் கார்த்தி' என்று தலைப்பிட்டுள்ளனர்.

Bharath in Kadaisi Bench Karthi

இந்தப் படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவி பார்கவன். இவர் தமிழில் வெல்டன், ஒரு காதல் செய்வீர், திரு ரங்கா ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.

Bharath in Kadaisi Bench Karthi

படம் பற்றி ரவி பார்கவன் கூறுகையில், "இன்றைய ஸ்மார்ட் போன்களின் மாடர்ன் உலகில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி தனது தனித்துவத்தை இழந்தவற்றில் காதலும் ஒன்று. உண்மையில் காதலின் அர்த்தம் என்ன ? காதல் என்பது எதுவரை ? இன்றைய இளைய தலைமுறைக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா? என முழுவதுமாக காதலை மையமாக கொண்ட கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாகவும் இன்றைக்குள்ள காதல் ட்ரெண்டை பிரதிபலிக்கும் வகையில் 'கடைசி பெஞ்ச் கார்த்தி' தயாராகிறது," என்றார்.

Bharath in Kadaisi Bench Karthi

கோடம்பாக்கத்தில் ரொம்ப நாட்களாக கடைசி பெஞ்சிலேயே இருக்கும் பரத்துக்கு இந்தப் படமாவது கை கொடுக்குமா?

English summary
Kadaisi Bench Karthi is a new movie produced by Sudhir Puthoda and directed by Ravi Bhargavan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil