twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிராஜாவின் புதிய சங்கம்.. உருவானது சட்ட திட்டங்கள்.. இதெல்லாம் இருந்தால் உறுப்பினர் ஆகலாம்!

    By
    |

    சென்னை: பாரதிராஜா தலைமையில் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தின் சட்டத்திட்டங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

    Recommended Video

    காதல் மன்னன் RANBIR KAPOOR | ASHWIN ANALYSE | FILMIBEAT TAMIL

    இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் கருணாஸ்க்கு கொரோனா தொற்று.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!நடிகர் கருணாஸ்க்கு கொரோனா தொற்று.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

    நடப்பு தயாரிப்பாளர்கள்

    நடப்பு தயாரிப்பாளர்கள்

    இந்த தயாரிப்பாளர் சங்கம், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களைப் பின்பற்றி நடக்க இருக்கிறது. இதுபற்றி தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, 'தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு 3 சங்கங்கள் உள்ளன. தமிழில் கில்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு இருக்கிறது. இப்போது, நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற மூன்றாவது சங்கம் உருவாகி உள்ளது' என்றார்.

    தனிப்பட்ட பெயர்கள்

    தனிப்பட்ட பெயர்கள்

    இதில் சேர்வதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் கூறியிருப்பதாவது: தமிழில் படம் தயாரித்தவர்கள், தற்போது தயாரித்து கொண்டு இருப்பவர்கள், தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள் இதில் உறுப்பினராக இணையலாம்.
    தயாரிப்பாளர்கள் உறுப்பினராக தங்கள் தனிப்பட்ட பெயர்களில் மட்டுமே சேர்க்கப்படுவார்கள், நிறுவனத்தின் பெயரில் அல்ல.

    தணிக்கை சான்றிதழ்

    தணிக்கை சான்றிதழ்

    வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள், தமிழில் இதுவரை ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்குள் 2 நேரடி தமிழ்ப் படங்களை தயாரித்து தணிக்கை செய்து வெளியிட்டு இருக்க வேண்டும். அல்லது கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 3 நேரடி தமிழ்ப் படங்களை தயாரித்து தங்களின் பெயரில் தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியிட்டு இருக்க வேண்டும். இந்த தயாரிப்பாளர்கள் முதன்மை உறுப்பினர்கள் ஆவார்கள்.

    குறைந்த படங்கள்

    குறைந்த படங்கள்

    ஐந்து வருட காலத்தில் எந்த படத்தையும் தயாரிக்காத அல்லது 3 படங்களுக்கு குறைந்த படங்கள் தயாரித்த முதன்மை உறுப்பினர்கள் மீண்டும் இணை உறுப்பினராக மாற்றப்படுவார்கள். முதன்மை உறுப்பினருக்கான தகுதியுள்ள தயாரிப்பாளர்கள் முதன்மை உறுப்பினராக சேர செலுத்தவேண்டிய கட்டணம் ரூ.50,000. அடிப்படை உறுப்பினர் களுக்கான கட்டணம், ரூ. 25,000. இவை உட்பட பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

    ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கத்தை உடைத்து, புதிய சங்கத்தை ஆரம்பிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், அயோத்தி ராமர் கோயில் பூஜை நடந்ததால், அந்த கூட்டத்தை இன்று மாற்றி வைத்தனர். அந்தக் கூட்டம் இப்போது நடந்து வருகிறது.

    English summary
    Bharathi raja's Tamil film active producer council has prepared a new by laws for their members
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X