twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்காந்த்-பாரதிராஜா கடும் மோதல்நடிகர் விஜய்காந்துக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்றுபாரதிராஜாவும் இயக்குனர்கள் சங்கமும் கோரி வருகின்றனர். ஆனால், தமிழ் என்ற வார்த்தை வருவதை விரும்பாதவிஜய்காந்த், இந்தக் கோரிக்கையை தட்டிக் கழித்து வருவதாக பாரதிராஜா கூறியுள்ளார்.அதே போல இயங்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவுள்ள கலை நிகழ்ச்சியில் நடிக, நடிகையர்களைபங்கேற்பதைத் தடுக்கும் விதத்தில் விஜய்காந்த் நடந்து கொள்வதாகவும் பாரதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.பாரதிராஜா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் விவரம்:சினிமாவில் பலரும் முதல்வர் ஆசையில் அலைகின்றனர். அயர்ன் பாக்ஸ், தையல் மெஷின் கொடுப்பவர், அதைபோட்டோ பிடித்து போஸ்டர் அடிப்பவர் எல்லாம் முதல்வராகிவிட முடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் ஓட்டுபோடாமலேயே அச் சங்கத்தின் தலைவர் பதவியைப் பிடித்தவர் விஜய்காந்த்.எம்.பியாகாமல் மத்திய அமைச்சரான அன்புமணியை இவர் எப்படி விமர்சிக்கலாம். இவரது பேச்சால்பா.ம.கவுடன் வெட்டிச் சண்டை உருவாகி தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர். வினியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றச் சொன்னால்அதை ஏற்க விஜய்காந்துக்கு ஏதோ ஒரு மொழிப் பற்று தடுக்கிறது.கூட்டம் சேருவதைப் பார்த்து முதல்வராகிவிடலாம் என்று நினைக்கின்றனர் சிலர். மக்களுக்காக உழைத்துதலைவர்களானவர்கள் இதை எப்படி பொறுத்துக் கொள்வார்கள்? தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்.நடிகர் சங்கப் பொன் விழா முடியும் வரை எந்த நிகழ்ச்சிகளிலும் நடிக, நடிகையர் பங்கேற்கக் கூடாது என்று தடைபோட்டுள்ளார் விஜய்காந்த். இதனால் இயக்குனர்கள் சங்கத்தின் விழாவிலும் நடிகர், நடிகையர் பங்கேற்கமறுக்கின்றனர். பொன் விழா எப்போது நடக்கும் என்றும் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார் விஜய்காந்த்.இவ்வாறு பாரதிராஜா மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.விஜய்காந்த் பதில்:இந் நிலையில் நடிகர் சங்கத்தின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று விஜய்காந்த்தலைமையில் நடந்தது.துணைத் தலைவர்கள் எஸ்.எஸ்.சந்திரன், நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர்சரத்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார்.நடிகர் சங்கத்தின் பொன் விழாவை எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சூர்யா, முரளி, ராஜேஷ், மன்சூர் அலிகான், வெண்ணிற ஆடைமூர்த்தி, லிவிங்ஸ்டன், எஸ்.வி.சேகர்,விவேக், ரேவதி, மனோரமா, ஜெயச்சித்ரா, பாபிலோனா உள்ளிட்ட நடிக, நடிகையர் கலந்து கொண்டனர்.முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும், பிரபு, கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த்,சம்பளப் பிரச்சினை, பணப் பிரச்சினை என்றால் மட்டும் நடிகர் சங்கத்தை நடிகர்கள் அணுகுகிறார்கள். ஆனால்பொதுக் குழு போன்றமுக்கியமான கூட்டங்களுக்கு வர மறுக்கிறார்கள். இது ஏன் என்று புரியவில்லை.கூட்டத்திற்கு வராதவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அதன் பிறகு அவர்கள் மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும். எம்.ஜி.ஆர்., சிவாஜி பெயரில் நடிப்புப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை விரைவில் தொடங்கநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.பொன் விழாவை எப்போது, எங்கு கொண்டாடுவது என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படிஅறிவிக்கவுள்ளோம்.பாரதிராஜாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரைதமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் அறிவிப்போம். எப்போது அதைஅறிவிப்போம் என்பது குறித்து பாரதிராஜா கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.

    By Staff
    |

    நடிகர் விஜய்காந்துக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்றுபாரதிராஜாவும் இயக்குனர்கள் சங்கமும் கோரி வருகின்றனர். ஆனால், தமிழ் என்ற வார்த்தை வருவதை விரும்பாதவிஜய்காந்த், இந்தக் கோரிக்கையை தட்டிக் கழித்து வருவதாக பாரதிராஜா கூறியுள்ளார்.

    அதே போல இயங்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடக்கவுள்ள கலை நிகழ்ச்சியில் நடிக, நடிகையர்களைபங்கேற்பதைத் தடுக்கும் விதத்தில் விஜய்காந்த் நடந்து கொள்வதாகவும் பாரதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

    பாரதிராஜா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் விவரம்:

    சினிமாவில் பலரும் முதல்வர் ஆசையில் அலைகின்றனர். அயர்ன் பாக்ஸ், தையல் மெஷின் கொடுப்பவர், அதைபோட்டோ பிடித்து போஸ்டர் அடிப்பவர் எல்லாம் முதல்வராகிவிட முடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் ஓட்டுபோடாமலேயே அச் சங்கத்தின் தலைவர் பதவியைப் பிடித்தவர் விஜய்காந்த்.

    எம்.பியாகாமல் மத்திய அமைச்சரான அன்புமணியை இவர் எப்படி விமர்சிக்கலாம். இவரது பேச்சால்பா.ம.கவுடன் வெட்டிச் சண்டை உருவாகி தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்துவருகின்றனர். வினியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று பெயரை மாற்றச் சொன்னால்அதை ஏற்க விஜய்காந்துக்கு ஏதோ ஒரு மொழிப் பற்று தடுக்கிறது.

    கூட்டம் சேருவதைப் பார்த்து முதல்வராகிவிடலாம் என்று நினைக்கின்றனர் சிலர். மக்களுக்காக உழைத்துதலைவர்களானவர்கள் இதை எப்படி பொறுத்துக் கொள்வார்கள்? தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்.

    நடிகர் சங்கப் பொன் விழா முடியும் வரை எந்த நிகழ்ச்சிகளிலும் நடிக, நடிகையர் பங்கேற்கக் கூடாது என்று தடைபோட்டுள்ளார் விஜய்காந்த். இதனால் இயக்குனர்கள் சங்கத்தின் விழாவிலும் நடிகர், நடிகையர் பங்கேற்கமறுக்கின்றனர். பொன் விழா எப்போது நடக்கும் என்றும் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார் விஜய்காந்த்.

    இவ்வாறு பாரதிராஜா மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.

    விஜய்காந்த் பதில்:

    இந் நிலையில் நடிகர் சங்கத்தின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று விஜய்காந்த்தலைமையில் நடந்தது.

    துணைத் தலைவர்கள் எஸ்.எஸ்.சந்திரன், நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர்சரத்குமார் ஆண்டறிக்கையை வாசித்தார்.

    நடிகர் சங்கத்தின் பொன் விழாவை எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் சூர்யா, முரளி, ராஜேஷ், மன்சூர் அலிகான், வெண்ணிற ஆடைமூர்த்தி, லிவிங்ஸ்டன், எஸ்.வி.சேகர்,விவேக், ரேவதி, மனோரமா, ஜெயச்சித்ரா, பாபிலோனா உள்ளிட்ட நடிக, நடிகையர் கலந்து கொண்டனர்.

    முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும், பிரபு, கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த்,

    சம்பளப் பிரச்சினை, பணப் பிரச்சினை என்றால் மட்டும் நடிகர் சங்கத்தை நடிகர்கள் அணுகுகிறார்கள். ஆனால்பொதுக் குழு போன்றமுக்கியமான கூட்டங்களுக்கு வர மறுக்கிறார்கள். இது ஏன் என்று புரியவில்லை.

    கூட்டத்திற்கு வராதவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அதன் பிறகு அவர்கள் மீது உரிய நடவடிக்கைஎடுக்கப்படும். எம்.ஜி.ஆர்., சிவாஜி பெயரில் நடிப்புப் பயிற்சிக் கல்லூரி ஒன்றை விரைவில் தொடங்கநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

    பொன் விழாவை எப்போது, எங்கு கொண்டாடுவது என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படிஅறிவிக்கவுள்ளோம்.

    பாரதிராஜாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரைதமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் அறிவிப்போம். எப்போது அதைஅறிவிப்போம் என்பது குறித்து பாரதிராஜா கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X