twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திணறி வருகிறோம்.. ஷூட்டிங் தொடங்க எங்களுக்கும் பர்மிஷன் கொடுங்க..இயக்குனர் பாரதிராஜா அறிக்கை!

    By
    |

    சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது போல, சினிமா படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

    Recommended Video

    தேனியில் தனிமைப்படுத்தப்பட்ட இயக்குனர் பாரதிராஜா | Bharathiraja

    கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரை படப்பிடிப்பை 60 பேர் கொண்ட குழுவுடன் நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து அனுமதி அளித்தது.

    அடுத்த புதுப்பேட்டையா வர வேண்டிய படம்.. ரிலீசாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. எங்கே சறுக்கியது என்.ஜி.கே?அடுத்த புதுப்பேட்டையா வர வேண்டிய படம்.. ரிலீசாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. எங்கே சறுக்கியது என்.ஜி.கே?

    சினிமா படப்பிடிப்பு

    சினிமா படப்பிடிப்பு

    இதையடுத்து அரசு விதிக்கும் நிபந்தனைக்குட்பட்டு சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார். தற்போது தேனியில் உள்ள அவர், அங்கிருந்து முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். அவர், மேலும் அதில் கூறியிருப்பதாவது:

    முடங்கி கிடக்கிறது

    முடங்கி கிடக்கிறது

    படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். விதிகளை தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதே நேரம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது.

    திணறி வருகிறோம்

    திணறி வருகிறோம்

    திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம். பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர்.

    பாதுகாப்பு முறை

    பாதுகாப்பு முறை

    சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். முதல்வர் தயை கூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஓர் அனுமதியை, சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அனுமதிக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம்.

    வழிகாட்டுதல்கள்

    வழிகாட்டுதல்கள்

    இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும். திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார். ஏற்கனவே தியேட்டர் அதிபர்கள் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பாரதிராஜா படப்பிடிப்பை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Bharathi raja asks, cinema shooting permission and assures to follow the government norms and safety
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X