twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்றுமே குறையாத கம்பீரம்.. இமயம்னு சும்மாவா சொல்வாங்க.. 81 வயதிலும் அசத்தும் பாரதிராஜா!

    |

    சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை போலவே பாரதிராஜாவின் பிறந்தநாளும் இருமுறை கொண்டாடப்படுகிறது.

    ஆகஸ்ட் 23ம் தேதி தான் பாரதிராஜாவின் பிறந்தநாள் அதனை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், சான்றிதழின்படி அவரது பிறந்தநாள் ஜூலை 17ம் தேதியான இன்று தான்.

    இரண்டு பிறந்தநாளையும் எளிமையான முறையில் பாரதிராஜா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இயக்குநராக எத்தனையோ சாதனைகளை தமிழ் சினிமாவில் செய்து அசத்திய பாரதிராஜா இந்த வயதிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவது குறித்து இங்கே பார்ப்போம்..

    எம்பி.,யாக நியமிக்கப்பட்ட இளையராஜா...முதல் ஆளாக வாழ்த்து சொன்ன பாரதிராஜா எம்பி.,யாக நியமிக்கப்பட்ட இளையராஜா...முதல் ஆளாக வாழ்த்து சொன்ன பாரதிராஜா

    இயக்குநர் இமயம்

    இயக்குநர் இமயம்

    1977ம் ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. முதல் படமே மிகப்பெரிய அதிர்வலையை தமிழ் திரையுலகில் நிகழ்த்தியது. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், மண் வாசனை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை என பல சிறந்த படங்களை இயக்கி இயக்குநர் இமயமாக உயர்ந்துள்ள பாரதிராஜா சான்றிதழின் படி இன்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    அலைகள் ஓய்வதில்லை தெலுங்கு வெர்ஷனான சீதாகோக்க சிலகா படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை 1982ம் ஆண்டு தட்டிச் சென்றது. 1986ம் ஆண்டு பாரதிராஜா தயாரித்து இயக்கி நடிகர் திலகம் சிவாஜி நடித்து இருந்த முதல் மரியாதை படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. வேதம் புதிது, அந்திமந்தாரை, கருத்தம்மா, கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களும் தேசிய விருதை பெற்றன. நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

    நடிப்பில் ஆர்வம்

    நடிப்பில் ஆர்வம்

    இயக்குநராக மட்டுமின்றி நடிப்பிலும் பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டானது. 1980ம் ஆண்டே தனக்கான ஒரு கதையை எழுதி நிவாஸ் என்பவரை இயக்குநராக்கி பாரதிராஜா ஹீரோவான படம் தான் கல்லுக்குள் ஈரம். இயக்குநர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் மிரட்டலான அரசியல்வாதி வில்லனாக நடித்திருப்பார். ரெட்டைச்சுழி படத்தில் இயக்குநர் கே. பாலசந்தர் உடன் இணைந்து போட்டி போட்டு நடித்திருப்பார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, சீதக்காதி என ஏகப்பட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் பாரதிராஜா.

    சிவகார்த்திகேயனுக்கு தாத்தா

    சிவகார்த்திகேயனுக்கு தாத்தா

    இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். தொடர்ந்து சினிமா விழக்களிலும், புதிய படங்களிலும் இளமை துள்ளல் உடன் நடித்து வருகிறார்.

    ராக்கி படத்தில் மிரட்டல்

    ராக்கி படத்தில் மிரட்டல்

    சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய பாரதிராஜா, இப்பவும் தான் ஒரு சிங்கமாக நடிக்க முடியும் என்பதை அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி படத்தின் மூலம் நிரூபித்து இருந்தார். எந்த ரோல் கொடுத்தாலும் வெளுத்து வாங்கும் ஆளுமை மிக்கவர் பாரதிராஜா என்பது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கு தெரிந்த ஒன்று தான்.

    தனுஷுக்கு தாத்தா

    தனுஷுக்கு தாத்தா

    வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷுக்கும் தாத்தாவாக நடித்துள்ளார் பாரதிராஜா. சமீபத்தில், தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் மற்றும் பாரதிராஜா இருவரும் பேசிக் கொள்ளும் ஒரு வசனக் காட்சியையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். வயதாகி விட்டதே ஓய்வெடுப்போம் என்றெல்லாம் நினைக்காமல் உயிர் உள்ளவரை கலைக்காகவே என பயணித்து வருகிறார் நம்ம பாசத்துக்குரிய பாரதிராஜா.

    English summary
    Director Bharathiraja's official Birthday Today. Not only Directing, he acted in numerous films with a great sense. From Kallukkul Eeram to Thiruchitrambalam he will give all his master class acting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X