»   »  நல்லா ஓடும்போது ஒரு படத்தை தூக்கலாமா? - பாரதிராஜா ஆதங்கம்

நல்லா ஓடும்போது ஒரு படத்தை தூக்கலாமா? - பாரதிராஜா ஆதங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போதே தியேட்டரை விட்டு தூக்குகிறார்கள். இது நியாயமா என்று கேள்வி எழுப்பினார் இயக்குநர் பாரதிராஜா.

விதார்த், பாரதிராஜா இணைந்து நடித்துள்ள குரங்கு பொம்மை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாரதிராஜா, "45 ஆண்டுகளாகிவிட்டது நான் சினிமாவுக்கு வந்து. சிவாஜி கணேசன் நடிப்பைப் பார்த்து, நடிகனாகும் ஆசையில் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் இயக்குநராகிவிட்டேன். 16 வயதினிலே படம்தான் என்னை பிரபலபடுத்தியது. இப்போதுதான் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பு வரும்போது ஏற்றுக்கொண்டு நடிக்கிறேன்.

குரங்கு பொம்மை

குரங்கு பொம்மை

குரங்கு பொம்மை கதையும் அதில் எனது கதாபாத்திரமும் மிகவும் பிடித்தது. நான் நடித்த காட்சிகளை திரையில் பார்த்தபோது என்னையே நான் ரசிக்கும்படி இருந்தது. நான் கிராமத்து வாழ்க்கையையும் மேல்மட்ட மக்களின் வாழ்க்கையையும்தான் படமாக்கி இருக்கிறேன். நான் தொடாத நடுத்தர மக்களின் வாழ்க்கையை குரங்கு பொம்மை படம் வெளிப்படுத்தி இருந்தது.

நல்லா ஓடிக்கிட்டிருக்கும்போதே...

நல்லா ஓடிக்கிட்டிருக்கும்போதே...

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக திரைக்கு வரும் சில படங்களுக்காக குரங்கு பொம்மை படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்கப்போவதாக தகவல் வருகிறது. நன்றாக ஓடும் படங்களை தியேட்டர்களில் இருந்து மாற்றுவது அநாகரிகமான செயல். இதுபோன்ற நடவடிக்கைகள் நல்ல படங்களையெல்லாம் காணாமல் போகசெய்து விடும்.

கொடுக்க ஆசைப்படுகிறேன்

கொடுக்க ஆசைப்படுகிறேன்

நான் 300 ரூபாயுடன் சென்னைக்கு வந்து நன்றாக சம்பாதித்து விட்டேன். எனக்கு கஞ்சத்தனம் உண்டு என்று சொல்வார்கள். இப்போது பிறருக்கு நிறைய கொடுக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. பொருளாதாரம்தான் உறவுகள், நட்பு உள்ளிட்ட சமூக விஷயங்கள் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

பணம் முக்கியம்

பணம் முக்கியம்

திரைப்படத்துறையில் என்னுடன் பயணித்த பல அறிவாளிகளும் திறமைசாலிகளும் பொருளாதார நிலையில் தாழ்ந்து இருந்ததால் காணாமல் போய்விட்டனர். எனவே பொருளாதார நிலைமையை உயர்த்திக்கொள்வது முக்கியம்.

இந்தத் தலைமுறையுடன்

இந்தத் தலைமுறையுடன்

இப்போது தமிழ் திரையுலகில் ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திறமையான டைரக்டர்கள் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் காலத்துக்கு ஏற்ப என்னை புதுப்பித்துக்கொண்டு ‘ஓம்' படத்தையும் விதார்த்தை வைத்து ஒரு படத்தையும் இயக்கி வருகிறேன். படைவீரன் படத்தில் நடிக்கிறேன்," என்றார்.

English summary
Director Bharathiraja says that nowadays even good movies are removing from theaters for unknown reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X