»   »  இதுக்காகத்தான் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்

இதுக்காகத்தான் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்- வீடியோ

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திரையுலகினர் சார்பில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது. ரஜினி, கமல், விஜய், தனுஷ் என பல நடிகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பாரதிராஜா உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ளவில்லை.

திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார். "மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு கூட்டாக தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னையில் அமைக்கப்பட்டது.

Bharathiraja explains why he did attend nadigar sangam functions

இப்போது எல்லா மாநிலங்களும் தங்களுக்கென தனித்தனி அமைப்புகளை வைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் இன்னும் பெயர் மாற்றப்படாமல் அதே பெயரே நீடிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் எனும் பெயரை மாற்றும் வரை அந்தச் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன்" எனக் கூறியுள்ளார் பாரதிராஜா.

இதற்கிடையே, பாரதிராஜா, ஆர்கே செல்வமணி, அமீர், வெற்றிமாறன், ராம் மற்றும் பலர் சேர்ந்து தமிழர் கலை பண்பாட்டுப் பேரவை எனும் அமைப்பைத் தொடங்கி ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் செய்து கைதாகினர்.

கடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போதே, சங்கத்தின் பெயரை மாற்ற நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கையை முன்வைத்தார். அது தொடர்பாக கமல், கவுண்டமணி என பலரும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A peace protest was held on behalf of the filmmakers urging to set up CMB. Bharathiraja has explained why he did not participate in this protest of nadigar sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X