»   »  'இமயத்தின்' திரைப்படக் கல்லூரி சேர்க்கை ஆரம்பம்... மாணவர்கள் ஆர்வம்!

'இமயத்தின்' திரைப்படக் கல்லூரி சேர்க்கை ஆரம்பம்... மாணவர்கள் ஆர்வம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்கலப்பா... புண்ணாக்கு விக்கிறவன், புளியங்கா விக்கிறவன்லாம் தொழிலதிபரு...' என கவுண்டமணி கிண்டலடித்ததைப் போல, சென்னையில் யார் யாரோ சம்பந்தமே இல்லாதவர்கள் எல்லாம் திரைப்படக் கல்லூரியைத் தொடங்கி வைத்து காத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஓரிரு கல்லூரிகள் விரைவில் மூடு விழா காணும் நிலையில் இருப்பதாகவும் தகவல்.

இந்த சூழலில்தான் தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டிய பெரும் படைப்பாளி பாரதிராஜா ஒரு திரைப்படக் கல்லூரியைத் தொடங்கினார். 'ஒரு திரைப்படக் கல்லூரியைத் தொடங்க தகுதி வாய்ந்தவர் இவர்தான். சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ளார்' என திரைத்துறையினரே பாராட்டினர்.

Bharathiraja film institute admission starts

சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த 'பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி பட்டறை'யை சமீபத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்தக் கல்லூரி திறந்ததிலிருந்தே நிறையப் பேர் சேர ஆர்வம் காட்டி வந்தனர். இப்போது சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாரதிராஜா. இது பத்தோடு பதினொன்றாக வந்துள்ள அமைப்பல்ல என்பதைக் காட்ட, பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்தக் கல்லூரியில் வகுப்புகளை ஆரம்பித்துள்ளார்.

பாரதிராஜா திரைப்பட பயிற்சி பட்டறையில் உள்ள வகுப்புகள்:

இயக்கம் - திரைக்கதை எழுதுதல்

ஒளிப்பதிவு

ஒலி வடிவமைப்பு

எடிட்டிங்

படத் தொகுப்பு மற்றும் வண்ணத் திருத்தம் (Film compositing & Colour correction)

நடிப்பு

மே 25 முதல் மாணவர் சேர்க்க நடக்கிறது. விவரங்களுக்கு www.briicedu.com.

English summary
Bharathiraja's newly started film institute announces its first admission.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil