»   »  எத்தனை வாரிசு நடிகர்களைத் தான் களம் இறக்கப் போகிறார் பாரதிராஜா?

எத்தனை வாரிசு நடிகர்களைத் தான் களம் இறக்கப் போகிறார் பாரதிராஜா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குற்றப்பரம்பரை ஒருவழியாக இப்போதைக்கு இல்லை என்று ஆகிவிட்டது. எனவே உடனடியாக ஒரு சின்ன படத்தை எடுத்து தன்னை நிரூபிக்கத் தயாராகி வருகிறார் பாரதிராஜா.

அலைகள் ஓய்வதில்லை பார்ட் 2வாக இருக்கும் என்று சொல்லப்படும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்கள் எல்லாமே புதுமுகங்கள் தானாம். யார் யார் என்பது தான் இதுவரை தகவல் இல்லை.

Bharathiraja and his mega plans

ஒருபக்கம் இயக்குனர் வசந்தின் மகனை அறிமுகப்படுத்தப் போகிறார் பாரதிராஜா என்கிறார்கள். வசந்தின் மகன் தான் மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் விடு விடு தலைவா பாடலுக்கு நடனமாடியவர்.

லிவிங்ஸ்டன் மகளை ஹீரோயினாக்கப் போவதாகவும் தகவல் வந்தது. லிவிங்ஸ்டன் மகள் ஒரு நிகழ்ச்சியில் கண்ணில் பட அவரை நடிக்க வைக்கிறேன் என்று லிவிங்ஸ்டனிடம் சம்மதம் கேட்டதாக ஒரு செய்தி வந்தது.

கார்த்திக்கின் இளைய மகன் வெகு நாட்களாக பாரதிராஜா கைகளால் தான் அறிமுகமாக வேண்டும் நடிப்புப் பயிற்சிகள் எடுத்து வருகிறார். விக்ரமின் மகனையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவிப்பு வந்தது.

ஆக, பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பார்ட் 2வுக்காக தான் அரை டஜன் வாரிசுகள் கோடம்பாக்கத்தில் காத்திருக்கின்றனர். பாரதிராஜா மனதில் என்ன இருக்கிறதோ?

English summary
Nearly half a dozen celebs's kids are waiting to get launched in Kollywood by Bharathiraja.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil