»   »  தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா

தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Bharathiraja indirectly attacks Rajinikanth

விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

பாரதிராஜா பேசுகையில், "தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும்.

முன்பு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்படும். இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும். நிகழ்ச்சி முடிந்ததை ஜனகன மன பாடிவிட்டார்களா என்று கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். இப்போது முதலில் ஜனகன மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா?

அதை காப்பாற்ற வேண்டும். தமிழ் நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம்.

ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? இதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்," என்றார்.

English summary
In a book release event director Bharathiraja was indirectly attacked Rajinikanth's political entry.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil