twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் இனிய மலேசிய தமிழ்மக்களே... - தாஜ்நூர் ஆல்பம் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா

    By Shankar
    |

    உலகம் முழுக்க தமிழ் சினிமாவுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மலேசிய சிங்கப்பூர் தமிழர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ஒரு மாறாத நேசம் எப்போதும் இருந்து வருகிறது.

    நமது ஊர் கலைஞர்களை அங்குள்ள தமிழர்கள் அவ்வப்போது அழைத்து பெருமை சேர்த்து வருவதையும் அறிவோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனில் தொடங்கி, தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு கலைஞர்களை அங்குள்ள தமிழர்கள் நேரில் வரவழைத்து பாராட்டியும் வணங்கியும் வருகிறார்கள்.

    நமது கலைஞர்களை கவுரவப்படுத்துகிற மலேசியாவையும் அங்கு வசிக்கும் தமிழர்களையும் நாம் பெருமை படுத்த வேண்டுமல்லவா? இந்த நோக்கத்தில் மலேசியாவின் பெருமைகளை தமிழகத்திலிருக்கும் ஒரு இசையமைப்பாளர் இசை ஆல்பமாக வெளியிடுவது இதுதான் முதல்முறை.

    தமிழ் மொழி காக்கும் மலேசியா

    தமிழ் மொழி காக்கும் மலேசியா

    ‘வம்சம்' படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வரும் தாஜ்நூர் ‘தமிழ்மொழி காக்கும் மலேசியா' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். இதன் வெளியீட்டு விழா, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதை ஒரு சாரிட்டி ஷோவாகவும் நடத்தியிருந்தது ஏ.ஆர்.என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம்.

    ஒன் மலேசியா

    ஒன் மலேசியா

    ‘ஒன் மலேசியா' என்ற கான்சப்ட்டின் அடிப்படையில் நம்பர் ஒன் வடிவத்துடன் கூடிய மிக பிரமாண்டமான ஐஸ்கட்டி உருவாக்கப்பட்டு அதனுள் இந்த சிடி பொருத்தப்பட்டது. பலரது முன்னிலையிலும் இந்த ஐஸ்கட்டி உடைக்கப்பட, உள்ளேயிருந்த சிடி கிம்மா-வின் தலைவர் இப்ராஹிம் மற்றும் கீதாஞ்சலிஜி -ன் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    என் இனிய மலேசிய தமிழ் மக்களே...

    என் இனிய மலேசிய தமிழ் மக்களே...

    இந்த விழாவில் தமிழ் சினிமாவின் சாதனையாளர் இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு தாஜ்நுரை பாராட்டி பேசினார். தமிழகத்தில் அவர் பேசும்போது ‘என் இனிய தமிழ் மக்களே ' என்றுதான் பேசத் துவங்குவார். இதே மலேசியாவில் அவர் எப்படி தனது உரையை துவங்குவாரோ என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் காத்திருக்க, ‘என் இனிய மலேசிய தமிழ் மக்களே....' என்றார் அவர். அவ்வளவுதான். கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆனது.

    மிகப் பெரிய இடம்

    மிகப் பெரிய இடம்

    தொடர்ந்து பேசிய பாரதிராஜா, ‘இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களையும் கேட்டேன். ஒரு சினிமா பாடலுக்கு தேவையான அத்தனை நுணுக்கங்களுடனும் இந்த பாடல்களை பிரமாண்டமாக உருவாக்கியிருந்தார் தாஜ்நூர். அதுமட்டுமல்ல, அந்த பாடல்களை இங்குள்ள பாடகர்களை கொண்டே பாடவும் வைத்திருக்கிறார். அதற்கு இசைக் கருவிகளை வாசித்தவர்களும் இங்கிருக்கும் கலைஞர்கள்தான் என்பதை கேள்விப்படும் போது தாஜ்நூர் இந்த நாட்டு கலைஞர்களுக்கும் எவ்வளவு மதிப்பு கொடுத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது' என்றார்.

    சிநேகன் - பா விஜய்

    சிநேகன் - பா விஜய்

    பாடலாசிரியர்கள் சிநேகன், பா.விஜய் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். சினேகன் பேசும்போது, இசைஞானி இளையராஜா மற்றும் வித்தியாசாகர் இருவரையும் போல எந்த வரிகளை எழுதிக் கொடுத்தாலும், உடனே அதற்கு அழகான ட்யூன் போடுகிற அளவுக்கு திறமை வாய்ந்தவர் தாஜ்நூர். இந்த பாடல்களை கேட்கிறவர்கள் மலேசியாவுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்கிற உணர்வை பெறுவார்கள், என்று வாழ்த்தினார்.

    தாஜ்நூர்

    தாஜ்நூர்

    தாஜ்நூர் பேசுகையில், "நான் ஒவ்வொரு முறை மலேசியா வரும்போதும், இந்த அழகான ஊரை பற்றி ஒரு ஆல்பம் வெளியிட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அதற்கு பொருத்தமான வரிகளுடன் என்னை அணுகினார் ரஷிதா. பழம் நழுவி பாலில் விழுந்த சந்தோஷத்தோடு நான் இசையமைக்க துவங்கினேன்.

    ‘ட்வின் டவர் போல் எங்கள் பாசமும் நேசமும் நிமிர்ந்து உயர்ந்து நிற்கும்' என்ற வரிகளை படித்தபோது, நான் ட்வின் டவரின் உச்சியில் அமர்ந்து ட்யூன் போட்ட சந்தோஷத்தை அடைந்தேன்," என்றார்.

    இதே விழாவில் இவரது இசைக் கச்சேரியும் நடைபெற்றது. நான்கு வகையாக பாடல்களை பிரித்துக் கொண்ட தாஜ்நூர், மலேசியா மக்களை சுமார் இரண்டு மணி நேரம் ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தினார்.

    இளையராஜா - ரஹ்மான் பாடல்களும்

    இளையராஜா - ரஹ்மான் பாடல்களும்

    முதலில் ஃபார்ஸ்ட் பீட் என்று சொல்லப்படும் வேகமான பாடல்களும், அதற்கப்புறம் மெலடி பாடல்களும், பிறகு இளையராஜாவின் மெலடி பாடல்களும் தனித்தனியாக இசைக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடலான ஜெய்ஹோ பாடலை அவரது சகோதரி ஏ.ஆர்.ரஹைனா பாட, ரசிகர்களின் உற்சாக கரகோஷம் விண்ணை பிளந்தது. தமிழகத்திலிருந்து பாடகர்கள் வேல்முருகன், யாசின், சம்சுதீன், தீபக், நான்ஸி, திருமுகி, சத்யன் ஆகியோரும் கலந்து கொண்டு பாடினார்கள்.

    நிகழ்ச்சியை ஏ.ஆர்.என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து அஷ்ரப், மற்றும் ரஷிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    English summary
    Veteran film maker Bharathiraja released the new album of Tajnoor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X