Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 8 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணம்... விஷால், பாரதிராஜா உள்பட தமிழ் திரையுலகினர் இரங்கல்!

சென்னை: ஜே.கே.ரித்தீஷ் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜே.கே.ரித்தீஷ். நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. ஆகிய படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
தீவிர அரசியல் ஈடுபட்ட வந்த ரித்தீஷ், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கட்சி மாறி தற்போது அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

திடீர் மரணம்
இன்று காலை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ரித்தீஷ், மதியம் வீட்டிற்கு வந்த பிறகு நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
|
விஷால் இரங்கல்
ஜே.கே.ரித்தீஷின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரித்தீஷ் மரண செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "வாழ்க்கையில் எதையும் கணிக்க முடியாது. ரித்தீஷ் மரண செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. நடிகர் சங்க தேர்தல் முதல் அவரை எனக்கு நன்கு தெரியும். அவரது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்", என அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா இரங்கல்
"ஜே கே ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக கருதுகிறேன்", என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
|
கஸ்தூரி இரங்கல்
"ரித்தீஷ் மரணம் அடைந்தார் என்று நம்பவே முடியவில்லை. மிக பெரிய அதிர்ச்சி . சிறிது நாட்களுக்கு முன்னர் கூட அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேனே ! ஐயோ கடவுளே! போற வயசே இல்லை. மனுஷனுக்கு கட்டம் வைச்ச கணக்கு என்னான்னு புரியவேயில்லை", என நடிகர் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
|
ஆர்.ஜே.பாலாஜி இரங்கல்
"ரித்தீஷின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதை என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு வயது 46 தான். மிக விரைவில் அவர் சென்றுவிட்டார். எனக்கு அவர் சகோதரர் போன்றனர். நிறைய பேருக்கு உதவி செய்து, அவர்களுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். இந்த வலியை உணர்த்த வார்த்தைகள் இல்லை", என நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

பலரும் இரங்கல்
இதேபோன்று நடிகை வரலட்சுமி, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலரும் ரித்தீஷின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.