»   »  இசைக்காக ஒரு பள்ளி

இசைக்காக ஒரு பள்ளி

Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசை கற்பிப்பதற்காக புதிதாக ஒரு இசைப் பள்ளியை தொடங்கியுள்ளது.

தமிழத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் பரத்வாஜ், இசைக்காக ஒரு பள்ளியைத் தொடங்கியுள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மெல்லிசைப் பள்ளி செயல்படும். பரத்வாஜ் இசைப் பள்ளி என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.


இந்த இசைப் பள்ளியில், வாய்ப்பாட்டில் ஒரு வருட டிப்ளமோ கற்றுத் தரப்படவுள்ளது. இந்த டிப்ளமோவுக்கு தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

தனது இசைப் பள்ளி குறித்து பரத்வாஜ் கூறுகையில், திரைப்படங்களில் மெல்லிசைக்கு உரிய இடம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கு முழுமையான அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளேன்.

எனது கனவுகளில் ஒன்று இந்த இசைப் பள்ளி. விரைவில் மாணவர் அனுமதி சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை ஆகிய இடங்களில் இந்த டிப்ளமோ படிப்பு சொல்லிக் கொடுக்கப்படும். செப்டம்பர் மாதத்திலிருந்து வகுப்புகள் தொடங்கும் என்றார்.

இசை போல இந்தப் பள்ளியும் புகழுடன் திகழட்டும்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil