»   »  ஸ்ட்ரைக்கிற்கு மத்தியில் ரிலீஸ் தேதியை அறிவித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு!

ஸ்ட்ரைக்கிற்கு மத்தியில் ரிலீஸ் தேதியை அறிவித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ட்ரைக்கை மீறி வெளியான படம்!- வீடியோ

சென்னை : அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் மார்ச் 29-ம் தேதி ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதுப் படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தை இம்மாதம் 29-ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அரவிந்த்சாமி

அரவிந்த்சாமி

சித்திக் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. மலையாளத்தில் மம்முட்டி நயன்தாராவை வைத்து இயக்கிய 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் சித்திக்.

பேபி நைனிகா

பேபி நைனிகா

ரமேஷ் கண்ணா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகை மீனாவின் மகளான குழந்தை நட்சத்திரம் நைனிகா, சேதுபதி படத்தில் நடித்த மாஸ்டர் ராகவன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை 'பரதன் பிலிம்ஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால், சூர்யா, விக்ரம் படங்கள் ரிலீஸானதால் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸாகவில்லை.

ஸ்ட்ரைக்கிற்கு மத்தியில்

ஸ்ட்ரைக்கிற்கு மத்தியில்

இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதுப்படங்களை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து அதை செயல்படுத்தி வரும் நிலையில் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
ArvindSwamy, AmalaPaul starred 'Bhaskar Oru Rascal' movie will be released on March 29th. Producers council has announced that it will not be releasing new films now, as 'Bhaskar oru rascal' team has decided to release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil