»   »  பாவனா கடத்தல்... காவ்யா மாதவன் தொடர்புக்கு 2 ஆதாரங்கள்... விரைவில் கைது?

பாவனா கடத்தல்... காவ்யா மாதவன் தொடர்புக்கு 2 ஆதாரங்கள்... விரைவில் கைது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை பாவனா கடத்தி, மானபங்கப்படுத்தப்பட்டு வீடியோ எடுக்கப்பட்ட வழக்கில் இன்று இரவோ நாளையோ திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவன் கைதாகக் கூடும் என்று தெரிகிறது.

நடிகை பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி நடிகர் திலீப்தான் என முடிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Bhavana case: Police have 2 imp evidences against Kavya

பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்திய பல்சர் சுனி சிறையிருந்து செல்போனில் பேசியபோது, பாவனாவின் மானபங்க வீடியோ காவ்யா மாதவன் நிறுவனத்தில் பணியாற்றும் நபரிடம் ஒப்படைக்கப்பட்டதை உறுதி செய்திருந்தார். இதைத் தொடர்ந்து அங்கே போலீசார் சோதனை நடத்தியதில் பல ஆதாரங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இவற்றில் பாவனா கடத்தலில் காவ்யாவுக்கும் பங்கிருப்பதை உறுதிப்படுத்தும் இரு ஆதாரங்கள் கிடைத்துள்ளது. எனவே இதன் அடிப்படையில் காவ்யாவை இன்றோ நாளையோ கைது செய்வார்கள் எனத் தெரிகிறது.

இப்போது காவ்யாவும் அவர் அம்மாவும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திலீப் கைதான போது கூட காவ்யா மாதவன் வெளியில் தலைகாட்டவில்லை. காவ்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
Kerala police have 2 important evidence for Kavya Madhavan's hand in Bhavana abduction case.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil