»   »  பாவனா வழக்கில் காவ்யாவுக்கு எதிராக கிடைத்த 2 ஆதாரங்கள்: கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்?

பாவனா வழக்கில் காவ்யாவுக்கு எதிராக கிடைத்த 2 ஆதாரங்கள்: கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாவனாவை கடத்த சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்காக பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார்.

காவ்யா மாதவன்

காவ்யா மாதவன்

பாவனா வழக்கு தொடர்பாக கொச்சியில் உள்ள காவ்யா மாதவனின் கடையான லக்ஷ்யாவில் போலீசார் அண்மையில் சோதனை நடத்தினர். இந்நிலையில் காவ்யாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

சிசிடிவி கேமரா

சிசிடிவி கேமரா

பாவனாவை கடத்திய பல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை சென்றது பக்கத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ரூ. 2 லட்சம்

ரூ. 2 லட்சம்

காவ்யாவின் லக்ஷ்யா கடையில் இருந்து தனக்கு ரூ. 2 லட்சம் கொடுக்கப்பட்டதாக பல்சர் சுனி போலீசாரிடம் தெரிவித்தார். இந்நிலையில் காவ்யாவின் கடை கணக்கை சரிபார்த்தபோது ரூ. 2 லட்சம் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்

போலீஸ்

பாவனா கடத்தல் வழக்கில் காவ்யா மாதவனுக்கு எதிராக இரண்டு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து காவ்யா மற்றும் அவரது தாயை போலீசார் இன்று தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

English summary
Kerala police have got two strong evidences against actress Kavya Madhdvan in Bhavana abduction case. Buzz is that police may take Kavya and her mom into custody today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil