»   »  ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்? நடிகை பாவனா விளக்கம்

ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்? நடிகை பாவனா விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திருச்சூரில் நேற்று நடைபெற்றது.

கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார் பாவனா. நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டியிருந்ததால் தற்போதுதான் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

Bhavana's explanation for secret engagement

மொத்தமாக 16 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியரும் பங்கேற்றார்.

நிச்சதார்த்தத்தை யாருக்கும் சொல்லாமல் நடத்தியது குறித்து பாவனா கூறுகையில், "என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக்கூடாது என்பதற்காக ரகசியமாக நடத்தினேன். அதனால் இந்நிகழ்ச்சி என் வீட்டில் நடைபெற்றது. என் நெருங்கிய நண்பர்களைக்கூட நான் அழைக்கவில்லை. தகவலை மட்டுமே சொன்னேன். என் திருமணம் நடக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். நவீனைக் கடந்த 5 வருடங்களாகத் தெரியும். என் முதல் கன்னடப் படமான ரோமியோவின் தயாரிப்பாளர் அவர். எங்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும்," என்றார்.

English summary
Why actress Bhavana's engagement held secretely? Here is Bhavana's explanation

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil