»   »  புது போன் வாங்க பாவனா போட்ட பிளான்!

புது போன் வாங்க பாவனா போட்ட பிளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் பாவனா பாலகிருஷ்ணனும் ஒருவர். அவர் நேற்று இரவு தன்னுடைய போனை தூக்கிப்போட்டு உடைக்கப்போகிறேன் என ட்வீட் செய்திருந்தார்.

புதிய ஐபோன் 8, ஐபோன் 10 ஆகிய மாடல்கள் நேற்று ஆப்பிள் நிறுவனத்தால்அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய தொழில்நுட்பங்களின் மீது ஆர்வமுள்ளோர் ஆப்பிள் போன் லாஞ்ச் செய்யப்பட்டதும் அதன் சிறப்பம்சங்களைக் கண்டு வியந்தனர்.

இந்த மாடல்களில் பல புதிய தொழில்நுட்பங்கள் அதில் உள்ளதால் ஆப்பிள் ஐபோன் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போனை உடைக்கப் போறேன் :

இந்நிலையில், ஆப்பிள் மாடலில் கவரப்பட்ட தொலைக்காட்சித் தொகுப்பாளர் பாவனா, தன்னுடைய பழைய போனை 'எதிர்பாராவிதமாக' உடைத்துவிட்டு புதிய ஐபோன் வாங்கப் போகிறேன்' என ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டிற்கு பலரும் ரிப்ளை செய்திருக்கின்றனர்.

ஏற்கெனவே உடைஞ்சிடுச்சு இங்க :

'இங்க ஏற்கெனவே உசைஞ்சிடுச்சு... வேற வழியே இல்லை. ஆப்பிள் போன் வாங்கித்தான் ஆகணும்' என ஒருவர் ரிப்ளை செய்திருக்கிறார்.

லாஞ்ச்சுக்கு அப்புறம் :

ஆர்டிஸ்ட் ஒருவரின் ரிப்ளைக்கு பதிலளித்த பாவனா, 'கரெக்டா ஐபோன் லாஞ்ச்க்கு மில்லிசெகண்ட் பிறகு போன் உடைஞ்சிருக்குமே...' என சர்காஸமாக கேட்டுள்ளார்.

உடைச்சுத்தான் ஆகணுமா :

'புது போன் வாங்கணும்னு தோணுச்சுனா உடைச்சுத்தான் ஆகணும்னு இல்லை... எனக்குக் கூட தரலாம்' என ஒருவர் ரிப்ளை செய்திருக்கிறார்.

ஓவர் சீனு :

'இதெல்லாம் சீன் சீன் ஓவர் சீன்' என ஒருவர் பாவனாவின் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்திருக்கிறார்.

English summary
The new iPhone 8,10 models were launched yesterday by Apple. Many people are interested in buying Apple's iPhone because of the new technologies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil