»   »  திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி

திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தயாரிப்பாளர் நவீனுடன் திடீர் என ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது ஏன் என்பது குறித்து நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார்.

மலையாள நடிகை பாவனாவும், கன்னட பட தயாரிப்பாளரான நவீனும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் உள்ள பாவனாவின் வீட்டில் வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இது குறித்து பாவனா மலையாள செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

நவீன்

நவீன்

நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் பெண் பார்க்கும் சம்பிரதாயத்திற்காக எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இருவீட்டாரும் இருந்த சமயத்தில் மோதிரம் மாற்றிக் கொள்ளலாமே என்ற பேச்சு கிளம்பியது.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியதால் தான் நிச்சயதார்த்தம் திடீர் என்று நடந்துவிட்டது. திடீர் என நடந்ததால் நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரிவிக்க முடியவில்லை.

திருமணம்

திருமணம்

எனக்கு திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் நடந்தது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் நிச்சயதார்த்த புகைப்படம் கசிந்து அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்று பாவனா தெரிவித்துள்ளார்.

மஞ்சு

மஞ்சு

நிச்சயதார்த்தத்திற்கு பாவனாவின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் மஞ்சு வாரியர், சம்யுக்தா வர்மா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் அடிக்கடி பாவனா வீட்டிற்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Bhavana has explained as to why her engagement to producer Naveen happened suddenly in a hush hush manner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil