Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கைதி ரீமேக்கா? வலிமை பார்ட் 2வா? அஜய் தேவ்கன் பட டீசரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தை இந்தியில் இயக்கி நடித்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன். அதன் 2வது டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
போலா என டைட்டில் வைக்கப்பட்டுள்ள கைதி படத்தின் இந்தி ரீமேக்கின் முதல் டீசர் வெளியான போதே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.
ஆனால், 2வது டீசர் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் மேக்கிங் தீயாக இருக்கு என சொல்லி வரும் நிலையில், கோலிவுட் ரசிகர்கள் வலிமை பார்ட் 2வா என கலாய்த்து வருகின்றனர்.
சினிமாவை
விட
ரசிகர்களுக்கு
உசுரு
தான்
முக்கியம்...
எமோஷனலான
லோகேஷ்
கனகராஜ்

கார்த்தியின் கைதி
நடிகர் கார்த்திக்கு மட்டும் எப்படி எல்லா இயக்குநர்களும் சூப்பரான படத்தை கொடுக்கின்றனர். அதன் பிறகு மற்ற நடிகர்களை இயக்கும் போது சொதப்பி விடுகின்றனர் என கோலிவுட்டில் பரவலாக ரசிகர்களே வியந்து பார்த்து வருகின்றனர். கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் ஒரு மாஸ்டர் பீஸ் என்றும் அதனை ரீமேக் செய்கிறேன் என்கிற பெயரில் அஜய் தேவ்கன் சொதப்பி உள்ளார் என வச்சு செய்து வருகின்றனர்.

போலா டீசர் 2
அஜய்
தேவ்கன்
இயக்கி
நடித்துள்ள
கைதி
இந்தி
ரீமேக்
படத்திற்கு
போலா
என
டைட்டில்
வைக்கப்பட்டுள்ளது.
கையில்
சிவனின்
சூலாயுதத்தை
எடுத்துக்
கொண்டு
எதிரிகளை
பந்தாடுகிறார்
அஜய்
தேவ்கன்.
ஜெயிலில்
இருந்து
அவர்
வருவது
ஃபிளாஷ்
பேக்
காட்சிகள்
என
பல
விஷயங்களையும்
இந்த
படத்தில்
அஜய்
தேவ்கன்
வைத்திருக்கிறார்
என்பதை
ட்ரெய்லரை
பார்த்தாலே
தெரிகிறது.

தபு தான் போலீஸ்
கைதி படத்தில் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் போலா படத்தில் நடிகை தபு நடித்துள்ளார். பாலிவுட்டில் தபு நடித்தாலே படங்கள் ஹிட் அடித்து விடுகின்றன என்கிற பெயர் அடிபட்டு வரும் நிலையில், இந்த படத்திலும் தபு போலீஸ் அதிகாரியாக அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தபுவை காப்பாற்றத்தான் கைதியான அஜய் தேவ்கன் உதவி செய்ய உள்ளார்.

சிவலிங்கத்துக்கு பூஜை
கைதி
படத்தில்
சிவ
பக்தராக
கார்த்தியை
இயக்குநர்
லோகேஷ்
காட்டி
இருப்பார்.
விபூதி
எடுத்து
பூசிக்
கொண்டு
சிவன்
பாடலை
பாடும்
காட்சி
மட்டுமே
இடம்
பெற்றிருக்கும்.
பாலிவுட்டில்
இப்படியொரு
காட்சி
கிடைத்த
நிலையில்,
அஜய்
தேவ்கன்
அதனை
வைத்து
பிரம்மாண்ட
சிவன்
சிலை,
சூலாயுதத்துடன்
சண்டை,
சிவலிங்கத்துக்கு
பாகுபலி
ஸ்டைலில்
பூஜை
என
படத்தை
பிரம்மாஸ்திரம்
பார்ட்
2
ரேஞ்சுக்கு
மாற்றி
விட்டார்.

3டியில் வருது
வரும் மார்ச் 30ம் தேதி போலா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி உள்ள இந்த திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த உள்ளது. 2வது டீசரை பார்த்த ரசிகர்கள் நல்லா தான் இருக்கு என கமெண்ட் செய்து வரும் நிலையில், கோலிவுட் ரசிகர்கள் இந்த ட்ரெய்லரை சும்மா வச்சு செய்து வருகின்றனர்.

வலிமை 2
இது கைதி இந்தி ரீமேக் இல்லை என்றும் படத்தில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இது வலிமை 2ப்பா என கலாய்த்து மீம் போட்டு வருகின்றனர். ஒரு ராவான படத்தை இப்படி மசாலா படமாக மாத்தி வச்சிருக்காரே அஜய் தேவ்கன் என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஐட்டம் சாங் வேற
கைதி படத்தில் பாடல்களே இல்லாத நிலையில், இந்த படத்தில் ஐட்டம் சாங் வேற வச்சிருக்காரே என குத்தாட்டம் போடும் நடிகையின் காட்சியையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பங்கம் பண்ணி வருகின்றனர். மகள் காலுக்கு அணிவிக்க கொலுசு வாங்கி வரும் காட்சி வித்தியாசமாக உள்ளதாகவும் ஆனால், அந்த தங்க கம்மலுக்கு ஈடாகாது என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.