»   »  ஜெயம் ரவியின் பூலோகம் 'உக்கிரம்' ரொம்ப அதிகம்

ஜெயம் ரவியின் பூலோகம் 'உக்கிரம்' ரொம்ப அதிகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் பூலோகம்.

2 வருடங்கள் கழித்து இன்று வெளியாகி இருக்கும் பூலோகம் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மூலம் ஒரே வருடத்தில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த நடிகர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.


பூலோகம் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் ஒருசிலரின் கருத்துகளை இங்கே காணலாம்.


என்ன உக்கிரம்

"படம் பார்த்த பின் "மசாணக்கொள்ளை" பாட்டை கேட்ட படி இருக்கிறேன்! ப்ப்பா! என்ன உக்கிரம்" என்று கூறியிருக்கிறார் வரவனையான்.


ஜெயம் ரவியின்

"ஜெயம் ரவியின் அனல் பறக்கும் வசனங்களுக்கு திரையரங்குகளில் விசில் சத்தம் வானை பிளக்கிறது" சுரேஷ் மோகனின் பாராட்டு இது.


வசூல் மழை

"ஜெயம் ரவியின் பூலோகம் வரும் நாட்களில் திரையரங்குகளை ஆளும். வசூல் மழை பொழியும்" என்று ஆரூடம் கூறியிருக்கிறார் தெறி விஜய்.


குத்துச்சண்டை வீரராக

"எம்.குமரன் படத்தை விட இந்த படத்தில் உண்மையான குத்துச்சண்டை வீரனாக படத்தில் வாழ்ந்திருக்கிறார் ஜெயம் ரவி" என்று கூறும் சிவகார்த்திகேயன் படத்திற்கு 3/5 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்.


English summary
Jayam Ravi, Trisha, Prakash Raj Starrer Bhooloham Released for Today - Audience Live Response.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil