»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பூமிகா. ததும்பும் நாகரீகத்தின் சின்னமாய் ஜொலிக்கும் இவர் தமிழ்த் திரையுலகைக் கலக்க வருகிறார். நம்பர் ஒன் ஹீரோயின் ஆவாரா என்பது வேறுவிஷயம்.

ஆளை மயக்கும் பளீர் வெண்மை நிறம். ஜோதிகா, சிம்ரன், லைலா போன்ற டாப் ஹீரோயின்களைப் போல் தமிழ் திரையுலகை கலக்குவதற்காக மினி மாஸ்டர்பிளான் போட்டு தெலுங்கு சினிமா விலிருந்து வந்திருக்கிறார்.

பயோ டேட்டா! விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் சிம்ரனின் தங்கை மோனல்.

மயிற்கூச்செரியும் அவரது கூர்மையான கண்கள்தான் அவரது ப்ளஸ் பாயின்ட். மணிரத்தினம், கதிர் போன்ற பிஸி டைரக்டர்கள் அவரை கதாநாயகியாகப்போட்டுப் படம் எடுக்க தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே பூமிகாவின் கவர்ச்சிக் கண்களைப் பார்த்து விட்டு சொக்கிப்போய்விட்டார்கள் என்று பேச்சு.

தமிழ் சினிமா துறையில் வலம்வருவாரா? டாப் மோஸ்ட் ஹீரோயின் என்று பெயர் எடுப்பாரா? எல்லாம் ரசிகர்கள் கையில்தான்.

Read more about: actress bhoomika cinema entry industry

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil