twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துளி

    By Staff
    |

    விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள டி.வி. நடிகை புவனேஸ்வரி நீதிமன்றத்தில்அபராதம் கட்ட மறுத்து விட்டார். தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    சென்னை வடபழனியில் ஓடும் காரில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக புவனேஸ்வரி அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார்.

    அவருடன் சேர்த்து மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போது புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

    கடந்த 11ம் தேதி குற்றப்பத்திரிக்கையின் நகல்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புவனேஸ்வரியுடன் சேர்த்து கைதுசெய்யப்பட்ட கலையரசி, விஜய் ஆனந்த் ஆகியோர் தங்கள் தவறை ஒப்புக் கொள்வதாகக் கூறினர்.

    இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ஜெயபாலன். ஆனால்புவனேஸ்வரியும் கைது செய்யப்பட்ட மற்றொருவரான ராஜசேகர் என்பவரும் தங்கள் தவறை ஒப்புக் கொள்ளமறுத்து விட்டனர்.

    "நாங்கள் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை. போலீசார் எங்கள் மீது பொய் வழக்கைப் போட்டுள்ளனர். இந்த வழக்கைஎதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடுவோம்" என்று அவர்கள் கூறினர்.

    இதையடுத்து வரும் 28ம் தேதி போலீஸ் சாட்சி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிஉத்தரவிட்டார்.

    பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த புவனேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில்,

    நான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு போட்டுள்ளனர். இது என் மீது போலீசார் போட்ட பொய் வழக்கு.

    கடவுள் அருளால் இவ்வழக்கிலிருந்து நான் விடுபடுவேன். போலீசாரின் பொய் வழக்கை உடைத்து நான் நிரபராதிஎன்பதை நிரூபிப்பேன் என்று கோபத்துடன் கூறினார் புவனேஸ்வரி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X