»   »  தெலுங்கு தேசத்தில் சேரும் புவனேஸ்வரி

தெலுங்கு தேசத்தில் சேரும் புவனேஸ்வரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்கு தேசம் கட்சியில் சேருமாறு தனக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளதாகவும்,அக் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாகவும் விபச்சார புகழ் டிவி நடிகை புவனேஸ்வரிகூறியுள்ளார்.
விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள புவனேஸ்வரி செக்மோசடி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திருவான்மியூரைச் சேர்ந்த கனகதுர்கா என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்த புவனேஸ்வரி அதற்காககனகதுர்காவுக்குத் தந்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது.

இதனையடுத்து கனகதுர்கா சென்னை சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் புவனேஸ்வரி மீது வழக்கு தொடர்ந்தார்.

இதில் ஆஜராகுமாறு நீதிபதி ரவீந்திரன் சம்மன்அனுப்பியும் ஆஜராகாததால் புவனேஸ்வரிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக் கப்பட்டது.


புர்கா அணிந்து நீதிமன்றத்துக்கு வரும் புவனேஸ்வரி
இந் நிலையில் இன்று புவனேஸ்வரி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அதை மே மாதம் 10ம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய புவனேஸ்வரி, என் மீது தொடரப்பட்டுள்ளவழக்கு பொய்யானது. அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் இது தொடரப்பட்டுள்ளது.

சந்திரபாபு நிாயுடு என்னை தெலுங்கு தேசத்தில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.

என்மீது தொடரப்பட்ட வழக்குகள் முடிந்துவிட்டால் தேர்தலிலும் போட்டியிடுவேன். இல்லையெனில் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்றார்.

விபச்சார வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் புர்கா உடுத்திக் கொண்டு வருவார் புவனேஸ்வரி என்பதுகுறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக டிவி, திரைப்பட நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளில் சேருவது தற்போது பேஷனாகி வருகிறது.குறிப்பாக கடன் தொல்லை, வழக்கு, விபச்சார வழக்கு உள்ளிட்டவற்றில் சிக்கியுள்ள, சிக்கும் அபாயம்உள்ளவர்கள் முக்கிய அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.

செக் மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ரோஜா பா.ஜ.கவில் சேர்ந்துள்ளார். அதேபோல கடன் தொல்லையில் சிக்கித்தவிக்கும் நடிகர் கார்த்திக், அதிமுகவில் சேர மனு கொடுத்து விட்டுக் காத்திருக்கிறார். திமுகவில் நீண்ட காலம்இருந்த நடிகர் பாண்டியன் பணப் பிரச்சினை காரணமாகவே சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் சேர்ந்ததாககூறப்பட்டது.

அதேபோல, நடிகர்கள் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் திமுகவிலிருந்து அதிமுகவிற்குத் தாவி தற்போதுஎம்.எல்.ஏ, எம்.பி. என அமோகமாக இருக்கிறார்கள். நடிகை கெளதமியும் கடந்த ஆண்டு இதேபோன்றகாரணத்திற்காகத்தான் பா.ஜ.கவில் சேர்ந்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்காததால் கட்சியில் இருந்துவிலகியே இருக்கிறார்.

தெலுங்கு தேசத்தில் இருந்த ஜெயப்பிரதா சமீபத்தில் அதிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து உ.பியில்போட்டியிட சீட்டும் வாங்கிவிட்டார். இதனால் தனது கட்டியில் கவர்ச்சி குறைந்துவிட்டதாக சந்திரபாபு நாயுடுநினைக்கிறார். அதைச் சரி கட்டவே புவனேஸ்வரிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாபிலோனா வாக்குமூலம்:

இதற்கிடையே தன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததாக தன் கணவர் அர்ஜூன்தாஸ் மீது தொடர்ந்த வழக்கில்நடிகை பாபிலோனா நீதிமன்றத்தில் இன்று ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.

கேரளாவைச் சேர்ந்தவர் பாபிலோனா. கவர்ச்சி ஆட்டங்கள் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் "நீங்கா இடம்பிடித்தவர்". இவரது சகோதரர்கள், பாபிலோனாவின் கணவர் அர்ஜூன் தாஸை (இவரும் கேரளாதான்) கடத்திச்சென்று கொடுமைப்படுத்தியதாக அர்ஜூன் தாஸின் மனைவி போலீஸில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து நடிகை பாபிலோனாவும் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு ஏற்கனவே கல்யாணம்ஆனதை மறைத்து விட்டு அர்ஜூன் தாஸ் தன்னை ஏமாற்றி, மயக்க மருந்து கொடுத்து கல்யாணம் செய்துகொண்டதாகவும், தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதுபாபிலோனா தனது தாயாருடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.

நீதிபதி விஜயகாந்திடம் நடந்தது என்ன என்பது குறித்து சுமார் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil