»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி உள்ள டி.வி. நடிகை புவனேஸ்வரி நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை.

விபச்சாரத்தின் மூலம் பல லட்சம் சொத்து குவித்துள்ளவர் புவனேஸ்வரி. இவரது வலையில் பல சினிமா புள்ளிகள்,தொழிலதிபர்களும் சிக்கியுள்ளனர். நடிகை மாதுரியுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் பின்னர்தனியே ஒரு கும்பலை வைத்துக் கொண்டு இந்தத் தொழிலில் தீவிரமாக இறங்கினார்.

இதற்காக மகாபலிபுரம் சாலையில் ஒரு பங்களாவும் வைத்துள்ளார். இது தவிர கார்களிலேயே இவர் விருந்துகொடுப்பதும் உண்டு.

விபச்சாரத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை வடபழனியில் கைது செய்யப்பட்டார்புவனேஸ்வரி. பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அவர் மீதான விபச்சார வழக்கு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் 4வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.நீதிபதி ஜெயபாலன் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புவனேஸ்வரி சார்பில் ஆஜரான அவரது வக்கீல், நேரமின்மை காரணமாக புவனேஸ்வரியால்நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கூறி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வருகிற 29ம் தேதி புவனேஸ்வரி ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil