»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டிவி நடிகை புவனேஸ்வரி பர்தா அணிந்து வந்தார்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க கார்களில், பங்களாக்களில் விபச்சாரம் செய்து வந்தார் புவனேஸ்வரி. சில மாதங்களுக்கு முன்போலீசில் சிக்கினார். ஒரு வாரம் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அவர் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், நேரமில்லை என்று கூறி ஆஜராகாமல் இருந்துவந்தார். இந் நிலையில் நேற்று கட்டாயம் ஆஜராகியே ஆக வேண்டும் என்ற உத்தரவு இருந்தது.

இதனால் இவரைப் படம் பிடிக்க பத்திரிக்கை புகைப்பட நிபுணர்கள் காத்திருந்தனர். ஆனால், புவனேஸ்வரியைக் காணவில்லை.இந் நிலையில் ஒரு பர்தா பெண் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

ஆனால், நீதிமன்றத்துக்குள் சென்று ஆஜராகிவிட்டு அவர் திரும்பியபோது அவரை அடையாளம் கண்டு கொண்டுவிட்டபுகைப்பட நிருபர்கள் படம் பிடித்தனர். அவர்களைத் திட்டியவாரே அங்கிருந்து விருக் என வெளியேறி காரில் ஏறி ஓடினார்புவனேஸ்வரி.

சில தாஸ்தாவேஜூகளைத் தயாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அரை நாள் புவனேஸ்வரி நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்என்று நீதிபதி கூறினார். ஆனால், புவனேஸ்வரிக்கு படப்பிடிப்பு இருப்பதாக அவரது வக்கீல் கூறியதால் மீண்டும் அடுத்த மாதம்6ம் தேதி ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது எந்த வேடத்தில் இவர் வருவார் என்று தெரியவில்லை.

ஸ்டுடியோக்களிலும் படப் பிடிப்புத் தளங்களிலும் எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் புவனேஸ்வரி நடந்து கொள்வதாக சகநடிக, நடிகையர் கூறுகின்றனர். விபச்சார வழக்கில் கைதான பெண் என்ற கவலையே அவரிடம் காண முடிவதில்லையாம்.

நிர்வாண நடிகைகள் பிடிபட்டனர்:

இந் நிலையில் சென்னையில் போட்டோ கிராபர்கள் மூலம் நிர்வாண போஸ் கொடுத்து அதை இன்டர்நெட்டில் விற்று வந்ததாகபோலீசாரால் தேடப்பட்டு வந்த இரு சினிமா துணை நடிகைகள் பிடிபட்டனர்.

இவர்களைத் தேடி பெங்களூருக்கு ஒரு போலீஸ் படை சென்றது. ஆனால், இவர்கள் சென்னையிலேயே சிக்கிவிட்டனர்.இவர்களில் ஒருவர் டி.வி. நடிகை. பெங்களூரைச் சேர்ந்த இவர் இப்போது தமிழ் டி.வி சேனல்களில் நடிக்கிறார்.விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். நேற்று போலீசாரிடம் இவர் சிக்கினார்.

இவர் கொடுத்த தகவலை வைத்து இன்னொரு நிர்வாண போஸ் நடிகையும் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ், தெலுங்குசினிமாக்களில் குரூப் டான்ஸ் ஆடி வருகிறார்.

இவர்கள் தவிர மேலும் 5 துணை நடிகைகளும் இதே போல நிர்வாண போஸ் தந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களைப்பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil