»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி பர்தா அணிந்து நீதிமன்றத்திற்கு வந்ததை முஸ்லீம்அமைப்பு கண்டித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித ஆடையான பர்தாவை விபச்சார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புவனேஸ்வரிஅணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தததை அனுமதித்த காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றுக்கும்சென்னையைச் சேர்ந்த ஜமாயத்து அஹ்லீஸ் ஷரீயத் வத்தரிகா என்ற இந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள இந்த அமைப்பின் தலைவர் முகம்மது ஷபீர் இது தொடர்பாகவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 29ம்தேதி ஆஜரான புவனேஸ்வரி இஸ்லாமியர்களின் புனிதஆடையான பர்தாவை அணிந்து கொண்டு வந்து ஆஜரானார். இது மிகவும் வேதனை தருவதாக உள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டப்படி இஸ்லாமியப் பெண்கள் அணிய வேண்டிய புனித ஆடையான பர்தாவைவிபச்சார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் அணிந்து நீதிமன்றத்திற்கு வந்தது இஸ்லாமிய மார்க்கசட்டத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

இதற்காக புவனேஸ்வரிக்கு எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தான் சாராத மதத்தின்புனித ஆடையை அணிந்து வந்து அதை இழிவுபடுத்திய புவனேஸ்வரி மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்தச் செயலை அனுமதித்ததன் மூலம் நீதித்துறையும், காவல்துறையும் இஸ்லாமிய மார்க்க சட்டத்தைஅவமதித்து விட்டனர். இது இனியும் தொடரக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்று ஷபீர்தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil