»   »  ஷமிதாப்… டெல்லியை கலக்கிய அமிதாப், தனுஷ், அக்ஷரா

ஷமிதாப்… டெல்லியை கலக்கிய அமிதாப், தனுஷ், அக்ஷரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் நடிப்பதை விட அந்த படத்தை புரமோட் செய்து வெற்றிபெற வைப்பதில்தான் நடிகர், நடிகையர்களின் பங்கு அதிகம் உள்ளது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘ஷமிதாப்' பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் கோலிவுட் நடிகர் தனுஷ் முதன் முறையாக இணைந்து நடித்துள்ள 'ஷமிதாப்' படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.

இந்த நிலையில் படத்தின் புரமோசன் தலைநகர் டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் நடைபெற்றது. அமிதாப் பச்சன், தனுஷ், நடிகர் கமல்ஹாசனின் 2வது மகள் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பாலிவுட் திரைப்படம் உலக அரங்கில் வெற்றி பெற்று வருவதாக கூறிய அமிதாப்பச்சன், ஷமிதாப் திரைப்படம் இந்திய தவிர 7 நாடுகளில் திரையிடப்படுவதாகவும் கூறினார்.

தனுஷ் திறமை

தனுஷ் திறமை

ஷமிதாப் படத்தில் தனுஷ் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அமிதாப் கூறினார். தனுஷை பாராட்டிய அமிதாப், பாலிவுட் பட உலகில் தனுஷ்க்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அடக்கத்துடன் தனுஷ்

அடக்கத்துடன் தனுஷ்

தனுஷை பற்றியும் அவருடைய நடிப்பை பற்றியும் கூற என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று கூறினார். அவருடைய பாராட்டுக்கு பதில் சொல்லும் வகையில் பேசிய தனுஷ், அமிதாப் போன்ற ஒரு லெஜன்ட்டுடன் தன்னுடைய நடிப்பை ஒப்பிடக்கூடாது என்று அடக்கத்துடன் கூறினார்.

திரண்ட கூட்டம்

திரண்ட கூட்டம்

இந்த திரை நட்சத்திரங்களை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டனர். அறிமுக விழா முடிந்து அரங்கில் இருந்து வெளியேவந்த அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் ஆகியோரை அருகில் சென்று காணவும், அவர்களுடன் ‘செல்பி' எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் போட்டி போட்டனர்.

தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

இதனால் ரசிர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்களின் அன்புத் தொல்லை கட்டுக்கு அடங்காமல் போகவே அவர்களிடம் இருந்து திரை நட்சத்திரங்களை பத்திரமாக மீட்க போலீசார் படாத பாடுபட்டனர்.

ரேடியோ ஜாக்கி

ரேடியோ ஜாக்கி

இதேபோல ஷமிதாப் புரமோசனுக்காக 'காமெடி நைட்ஸ் வித் கபில்' நிகழ்ச்சியிலும் இந்த குழுவினர் பங்கேற்று ஷமிதாப் பற்றி பகிர்ந்து கொண்டனர்.

'பிக் பி' என்று பெருமையோடு பாலிவுட் ரசிகர்களால் அழைக்கப்படும் அமிதாப், ரெட் எப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக நாளை பேச இருக்கிறார் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

English summary
Megastar Amitabh Bachchan, south superstar Dhanush and debutant Akshara Hassan visited capital city to spread the word about their upcoming film Shamitabh directed by R Balki.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil