»   »  ட்விட்டரை தெறிக்கவிடும் பிக் பி! #AB29Million

ட்விட்டரை தெறிக்கவிடும் பிக் பி! #AB29Million

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாலிவுட் சினிமாவின் பிக் பி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். இவர் படங்களைத் தாண்டி தன்னுடைய ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் எப்போதும் தொடர்பில் இருப்பார். தற்போது இவரது ட்விட்டர் பக்கத்தை 29 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இந்தத் தகவலை ட்வீட் செய்த அமிதாப் பச்சன் மேலும், 'ஒரு காலத்தில் என்னுடைய ட்வீட்டை ஒருவர் மட்டுமே படிப்பார், இப்போது 29 மில்லியன் ஃபாலோயர்ஸை எட்டியுள்ளது எனது ட்விட்டர் பக்கம். இது எல்லாமே உங்களால் தான்' என உற்சாகமாக ட்வீட் செய்திருக்கிறார்.

Big B who strikes twitter

29 மில்லியன் ஃபாலோயர்ஸ் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் #AB29Million எனும் ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். திரைப் பிரபலங்கள் பலரும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள்.

Big B who strikes twitter

மூத்த நடிகராக இருந்தாலும் இளைய தலைமுறையினரைக் கவரும் விதமாக தனது நடிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கை பற்றியும் அவ்வப்போது ட்விட்டரில் பகிர்ந்துகொள்வதற்கான பலன் தான் இளம் நடிகர்கள் கூட இன்னும் எட்டிப்பிடிக்காத இந்தச் சாதனை!

இவருக்கு அடுத்து ட்விட்டரில், ஷாருக்கானுக்கு 27.6 மில்லியன், சல்மான் கானுக்கு 25.1 மில்லியன், அமீர்கானுக்கு 21.8 மில்லியன், தீபிகா படுகோனேவிற்கு 20 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

English summary
'Bollywood Big B' Amitabh Bachchan had cross 29 million followers in twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil