»   »  5 ஸ்டார் ஹோட்டலில் மயக்க மருந்து கொடுத்து என்னை ஏதோ செய்துவிட்டார்கள்: நடிகை புகார்

5 ஸ்டார் ஹோட்டலில் மயக்க மருந்து கொடுத்து என்னை ஏதோ செய்துவிட்டார்கள்: நடிகை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட மாடல் பூஜா மிஸ்ரா தனக்கு யாரோ குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி விட்டதாக ராஜஸ்தான் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பீகாரைச் சேர்ந்த மாடல் பூஜா மிஸ்ரா. டிவி நிகழ்ச்சிகளில் வந்துள்ளார். பாலிவுட் படங்கள் சிலவற்றில் குத்தாட்டம் போட்டுள்ளார். ஆனால் சல்மான் கான் நடத்திய பிக் பாக்ஸ் 5 ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் பூஜா காலண்டர் ஒன்றுக்காக போட்டோஷூட் நடத்த ராஜஸ்தான் சென்றார்.

ராடிசன் ப்ளூ

ராடிசன் ப்ளூ

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ராடிசன் ப்ளூ என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார் பூஜா. அந்த ஹோட்டலில் தங்கி அவர் போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவரை புகைப்படம் எடுத்த கலைஞர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

பாலியல் தாக்குதல்

பாலியல் தாக்குதல்

ஹோட்டலில் தான் குடித்த குளிர்பானத்தில் யாரோ மயக்க மருந்தை கலந்து கொடுத்ததாகவும் அதை குடித்துவிட்டு அறைக்கு சென்ற தான் மயங்கிவிட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார்.

கண் விழித்து பார்த்தபோது

கண் விழித்து பார்த்தபோது

காலையில் கண் விழித்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது போன்று உணர்ந்ததாகவும், தனது பொருட்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

தனக்கு நேர்ந்த கதிக்கு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, அவரது தாய் பூனம் சின்ஹா, இந்தி நடிகை இஷா கோபிகர் உள்ளிட்டோர் தான் காரணம் என பூஜா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பொறாமை

பொறாமை

தன் மீதுள்ள பொறாமையாலும், தன்னுடன் நேருக்கு நேர் மோத துணிச்சல் இல்லாததாலும் சோனாக்ஷி இவ்வாறு செய்துவிட்டதாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகம் தனக்கு எதிராக சதி செய்து வருவதாக கூறுகிறார் பூஜா.

வழக்கு

வழக்கு

பூஜா அளித்துள்ள புகாரின்பேரில் உதய்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூஜா சோனாக்ஷி, இஷா தவிர மேலும் ஒரு பெரும் புள்ளியை பற்றியும் புகார் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

English summary
Big Boss 5 contestant Pooja Mishra on Wednesday filed molestation charges against unidentified people in Udaipur, over 400 kms from Jaipur, police said.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil