»   »  சுஜா, சக்தி, கணேஷ், காயத்ரி, ஹரீஷ்.... இந்த பிக்பாஸ் பார்ட்டிகள் இங்கே என்ன பண்றாங்க?

சுஜா, சக்தி, கணேஷ், காயத்ரி, ஹரீஷ்.... இந்த பிக்பாஸ் பார்ட்டிகள் இங்கே என்ன பண்றாங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சி அதில் பங்கேற்ற அனைவரையுமே ஏதோ ஒரு வகையில் பிஸியாக்கிவிட்டுவிட்டது, நிகழ்ச்சியை தொகுத்துத் தந்த கமல் ஹாஸன் உள்பட.

நடிப்பு, விளம்பரங்கள், கல்லூரி நிகழ்ச்சிகள் கடைத் திறப்புகள் என படு சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவர்கள். குறிப்பாக கணேஷ் வெங்கட்ராமுக்கு அடுத்தடுத்த தமிழ், மலையாளத்தில் நல்ல வாய்ப்புகள் வந்துள்ளன.

Big Boss celebrities launch a food cafe

ஜூலி கூட டிவி, சினிமா என புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஓவியாதான் ஏகப்பட்ட பார்ட்டிகளில் பிஸியாகிவிட்டார்.

Big Boss celebrities launch a food cafe

அண்மையில் நடந்த ஒரு தனியார் நிறுவன உணவக அறிமுக விழாவில் சுஜா, காயத்ரி ரகுராம், கணேஷ் வெங்கட்ராம், சக்தி மற்றும் ஹரீஷ் ஆகிய 5 பேரும் மொத்தமாகக் கலந்து கொண்டார்கள். இவர்களே சமைத்ததுபோல, சமையல் கலைஞர்கள் வேடம் போட்டு கொஞ்ச நேரம் போஸ் கொடுத்தனர்.

Big Boss celebrities launch a food cafe

ஜூலி, ஓவியாவை ஏன் விட்டுட்டீங்க? என்று கணேஷிடம் கேட்டபோது, "இது எங்க ஏற்பாடு இல்லை. நிகழ்ச்சி நடத்தினவங்க கூப்பிட்டாங்க. வந்தோம்.." என்றார்.

English summary
Big Boss celebrities Suja, Gayathri, Sakthi, Ganesh Venkatram and Harish have recently inaugurates a food cafe jointly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil