»   »  நான் மட்டும் பேசினேன் ஜூலி தூக்கு போட்டு செத்துடுவா: பில்ட்அப் கொடுக்கும் சினேகன்

நான் மட்டும் பேசினேன் ஜூலி தூக்கு போட்டு செத்துடுவா: பில்ட்அப் கொடுக்கும் சினேகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மறுபடியும் அனைவரும் ஜூலிக்கு எதிராக திரும்பிவிட்டனர்.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று பிக் பாஸ் கூறுவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களை பற்றி அல்ல. மாறாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நெட்டிசன்களை பார்த்து தான்.

ஆம், சமூக வலைதளங்களில் யாரை பற்றி அதிகம் பேசப்படுகிறதோ அவரையே பிக் பாஸ் வீட்டில் டார்கெட் செய்கிறார்கள்.

ஜூலி

ஜூலி

முதலில் பரணியை ஒரு பைத்தியம் ரேஞ்சுக்கு கொண்டு வந்த பிக் பாஸ் குடும்பத்தினர் தற்போது ஜூலியை ஏதோ கெட்டவள் போன்று சித்தரித்து பேசுகிறார்கள்.

லுக்

என்ன லுக்கு விடுகிற, லுக்கு விட்ட உன் கண்ணை நோண்டிவிடுவேன். உன் பார்வையே மாறிவிட்டது. அதை வேறு எங்காவது வச்சுக்க என்று சக்தி ஜூலியை பார்த்து கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

மறுமுகம்

மறுமுகம்

ஜூலியின் மறுமுகம் எங்களுக்கு தெரிந்து நாங்கள் பயந்துட்டோம் என்று சினேகன் ரைசாவிடம் கூறுகிறார். பழிவாங்குவது ஜூலி கண்ணிலேயே தெரிகிறது என்கிறார் சக்தி.

ஆரார்

ஆரார்

ஜூலி ஆராரை ஒருதலையாக காதலிக்கிறார். அப்படித் தாங்க காட்டி பில்ட்அப் கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த ஆராரோ ஜூலி முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்கிறார்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

நான் இன்று வரை ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து அவளிடம் பேசாததற்கு காரணம் என்ன. பேசினால் அவள் நைட்டே தூக்கு போட்டு செத்துடுவா என்கிறார் சினேகன். அனைவரும் கொடுத்த காசுக்கு எழுதிக் கொடுத்தபடி கச்சிதமாக நடிக்கிறார்கள் பாஸ்.

கான்செப்ட்

கான்செப்ட்

பிக் பாஸுக்கு கான்செப்ட்டே கிடைக்கவில்லை போன்று. எப்பொழுது பார்த்தாலும் ஜூலியானாவை குறி வைத்தே நிகழ்ச்சியை ஓட்டுகிறார்கள். அந்த பொண்ணும் கொடுத்த காசுக்கு மேலேயே ஓவர் ஆக்டிங் செய்கிறது.

English summary
Big Boss contestants have joined hands again to target Juliana. Juliana is the favourite of Big Boss, it seems.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil