»   »  பிக் பாஸ் வீட்டில் சேஃபாக விளையாடும் பிந்து மாதவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் சேஃபாக விளையாடும் பிந்து மாதவியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை பிந்து மாதவிக்கு பேசப்பட்டுள்ள சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீர் என்று வந்துள்ள போட்டியாளர் நடிகை பிந்து மாதவி. பிந்து மாதவிக்கு கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட் இல்லை. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பிந்துவுக்கு பிக் பாஸ் கொடுக்கும் சம்பள விபரம் தெரிய வந்துள்ளது.

சம்பளம்

சம்பளம்

பிந்து மாதவிக்கு வாரம் ரூ. 3 லட்சம் சம்பளமாம். பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை மூன்று பிரிவாக பிரித்து தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதில் ஏ பிரிவுக்கு வாரம் ரூ. 3 லட்சம் சம்பளம்.

ஓவியா

ஓவியா

எங்கள் தலைவி என்று ரசிகர்கள் கொண்டாடும் நடிகை ஓவியாவுக்கு வாரத்திற்கு ரூ. 2.5 முதல் ரூ. 3 லட்சம் சம்பளம் அளிக்கப்படுகிறது. வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சனை இல்லாமல் நடிக்கிறார் ஓவியா.

கணேஷ்

கணேஷ்

தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோர் மட்டும் தான் ஓவியா, பிந்து மாதவி அளவுக்கு சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகன்

சினேகன்

கட்டிப்பிடி மன்னன் சினேகன், வையாபுரி, காயத்ரிக்கு வாரத்திற்கு ரூ.1.5 முதல் ரூ. 2 லட்சமும், ஜூலி, ஆரவ், ரைசா ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சமும் அளிக்கப்படுகிறது.

English summary
According to repors, actress Bindhu Madhavi is given Rs. 3 lakh per week to stay in the big boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil