»   »  என் மனைவி செய்வது தவறு, ஜூலிக்கே என் சப்போர்ட்: ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர்

என் மனைவி செய்வது தவறு, ஜூலிக்கே என் சப்போர்ட்: ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஆர்த்தி செய்வது தவறு என்று அவரின் கணவரும், நடிகருமான கணேஷ்கர் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை குண்டு ஆர்த்தி ஜூலியானாவையே டார்கெட் செய்கிறார். அவருடன் சண்டைக்கு பாய்கிறார் ஆர்த்தி.

இந்நிலையில் இது குறித்து ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ்

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை என் மனைவிக்காக பார்க்கவில்லை. யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பார்க்கிறேன்.

சமாதானம்

சமாதானம்

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் 100 நாட்கள் ஒற்றுமையாக இருக்க அங்கே செல்லவில்லை. சண்டை போட்டு ஒருவரையொருவர் வீட்டை விட்டு வெளியேற்ற சென்றுள்ளனர். அவர்களிடம் சமாதானத்தை எதிர்பார்க்க முடியாது.

சண்டை

சண்டை

ஆர்த்தி செய்வது எனக்கும் பிடிக்கவில்லை. விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ள ஜூலியிடம் ஆர்த்தி கொஞ்சம் ஓவராக சண்டை போடுகிறாரோ என்று எனக்கு தோன்றுகிறது.

ஜூலி

ஜூலி

சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஜூலியானாவை திரைத்துறையை சேர்ந்தவர்கள் டார்கெட் செய்வது தவறு. நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் ஜூலிக்கு ஆதரவளித்திருப்பேன்.

பரணி

பரணி

பரணி நல்லவராக உள்ளார். அதனால் தான் ஜூலிக்கு ஆதரவாக உள்ளார். ஜூலியும் ஓவராக தான் பேசுகிறது. சண்டைக்கு அவள் கூப்பிடும்போது ஜூலியாவது கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாம்.

ஆர்த்தி

ஆர்த்தி

வீட்டில் ஆர்த்தி கோபப்பட்டால் நான் அமைதியாகப் போய்விடுவேன். பிக் பாஸ் வீட்டில் ஆர்த்தி கோபப்பட்டால் யார் அமைதியாக போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே அந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.

டைட்டில்

டைட்டில்

ஆர்த்தி வீட்டிற்கு வரும்போது பிக் பாஸ் டைட்டிலோடு தான் வர வேண்டும் என்று அவரிடம் சொல்லி அனுப்பி வைத்துள்ளேன். நீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான் 100 நாட்கள் ஃப்ரீயா இருப்பேன் என ஆர்த்தியிடம் கூறினேன் என்கிறார் கணேஷ்கர்.

English summary
Actor Ganeshkar said that he doesn't agree with what his wife Arthi is doing in Big Boss house and he supports Juliana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil