»   »  ஒரேயொரு மேட்டரில் பார்வையாளர்களை 'க்ளீன் போல்டு' ஆக்கிய பிக் பாஸ்

ஒரேயொரு மேட்டரில் பார்வையாளர்களை 'க்ளீன் போல்டு' ஆக்கிய பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கதறி அழுததன் காரணம் தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தாரை அழைத்து வருகிறார்கள்.

முதலில் வையாபுரியின் மனைவி, குழந்தைகள் வந்தனர்.

சினேகன்

சினேகன்

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் கதறி அழும் ப்ரொமோ வீடியோ வெளியானது. அவர்கள் அழுதது சினேகனின் வயதான தந்தையை பார்த்து தான்.

தந்தை

தந்தை

சினேகன் பல காலம் கழித்து தனது தந்தையை பார்த்துள்ளார். இதுவரை சென்னையே வராதவரை சினேகனுக்காக அழைத்து வந்துள்ளார் பிக் பாஸ். சினேகன் சென்னை வந்த 20 ஆண்டுகளில் அவரது தந்தை இங்கு வந்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பிரிந்திருந்த தந்தை, மகனை சேர்த்து வைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் டிஆர்பிக்காக தான் பிக் பாஸ் இதை செய்துள்ளார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

ஜூலி

ஜூலி

சினேகனின் தந்தையை பார்த்தவுடன் ஜூலி ஓவர் ஆக்டிங் செய்ததை பார்வையாளர்கள் பார்க்கத் தவறவில்லை. யம்மாடி, இந்த சூலி என்னம்மா நடிக்குது என்று கிண்டல் செய்துள்ளனர்.

பாவம்

பாவம்

சினேகனின் தந்தை இந்த தள்ளாத வயதில் சென்னை வரை வந்து பேச முடியாமல் தனது மகனிடம் பேசியது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. சினேகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அவரின் தந்தை விரும்புகிறார்.

English summary
Audience got emotional after seeing Snehan's dad in the Big Boss house. The 95-year-old man has come to Chennai to meet his son whom he hasn't seen in a long time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil