For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக்பாஸ் வீட்ல ஜெயிலுக்கு போன கவின் அம்மாவுக்கு நிஜமாவே 7 வருஷம் சிறை

  |
  Watch Video : Bigg Boss 3 Tamil Kavin Mother arrest?

  சென்னை: பிக்பாஸ் வீட்டில் விளையாட்டுக்கு ஜெயிலில் அடைபட்டார் கவின். அவரது அம்மாவோ, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  பிரிக்க முடியாதது என்னவோ என்ற கேள்விக்கு, இனிமேல் பிக்பாஸ் சீசன் 3ம் போலீஸ் தலையீடும் என்று சொல்லக்கூடும் போலிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் முதன் முதலாக வனிதாவை விசாரிப்பதற்காக ஆந்திர போலீஸார் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து வனிதாவிடம் விசாரித்து விட்டு சென்றனர்.

  Big Boss Kavin mother money cheating case 7 year jail

  இரண்டாவதாக, மீரா மிதுனை விசாரிப்பதற்காக சென்னை போலீஸார் பிக் பாஸ் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர். மூன்றாவதாக நடிகை மதுமிதா தற்கொலை செய்துகொள்ள முயன்ற பிரச்சனையில் விசயம் போலீஸ் வரை சென்று பரபரப்பாகிவிட்டது.

  இந்நிலையில், அடுத்ததாக கவின் ராஜ் மூலமாக நீதிமன்றம் மூலமாக புதிதாக ஒரு பிரச்சனை உருவாகியிருக்கிறது.

  திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவரும் சொர்ணராஜன், அருணகிரிநாதன் தமயந்தி, ராணி ஆகியோர் கூட்டு சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தியதாகவும், வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த ரூ.32.28 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றி, தலைமறைவாகிவிட்டதாகவும் கடந்த 2007ஆம் ஆண்டில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

  அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடந்துவந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி இருவரும் இறந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ராஜலட்சுமி, ராணி மற்றும் தமயந்தி ஆகியோருக்கு, மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டத்தின் படி 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதோடு இந்த வழக்கில் சாட்சியளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் வழங்கவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

  இதில் குற்றவாளியான ராஜலட்சுமியின் மகன் தான் நடிகர் கவின் ராஜ். இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயுமானவன் என்ற டிவி சீரியல் மூலம் அறிமுகமானார். பின்பு சரவணன் மீனாட்சி சேரியலில் இரண்டாவது சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானர்.

  மகளால் இயக்குநர்களிடம் புது கன்டிஷன் போடும் அஜித் மகளால் இயக்குநர்களிடம் புது கன்டிஷன் போடும் அஜித்

  பின்னர் அவர் திரைத்துறையில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய சத்ரியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். பின்னர் அவர் இயக்குனர் ஷிவா அரவிந்த் இயக்கத்தில் வந்த நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். சமீபத்தில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சில் கலந்து கொண்டார்.

  நடிகர் கவின் ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் கலந்து கொண்டு தன்னை அறிமுகம் செய்யும்போது, ஒரு பிரச்னை காரணமாக குடும்பத்தோடு திருச்சியிலிருந்து சென்னை குடி பெயர்ந்தோம். அப்போது உறவினர்கள் யாரும் அடைக்கலம் தரவில்லை.

  நண்பர்கள் தான் உதவினார்கள், என்று நிகழ்ச்சியில் கூறினார். இந்நிலையில் நடிகர் கவின் ராஜ் குடும்பத்தினர் சீட்டு மோசடி வழக்கில் குற்றவாளிகள் எனத் திருச்சி மாவட்ட தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறு செய்தவர்களுக்கு அந்த வீட்டிலுள்ள சிறையில் அடைத்து தண்டனை வழங்குது நடைமுறை. இந்த தண்டனைக்கு கவினும் ஆளானார். அவர் அப்போதே நினைத்திருப்பாரோ, நம் குடும்பத்தினர் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள் என்று.

  English summary
  Big Boss Kavin’s mother Rajalakshmi has sentenced in jail for 7 years for Chit Fund fraud
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X